Eps vs Seeman: ”இது தான் அரசியல் நாகரிகமா?” பெருந்தன்மையாக நடந்துக்கொண்ட இபிஎஸ்! சீமானை வெளுத்து வாங்கும் அதிமுகவினர்
சீமானின் பேச்சு அரசியல் நாகரிகமற்றதாக இருப்பதாகவும் இபிஎஸ் பேசிய வீடியோவில் அவர் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்துக்கொண்டார், இது தான் அரசியல் நாகரிகம் என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்து தான் முதல்வரானார் என்று விமர்சித்த நிலையில் சீமான் -நடிகை விவகாரத்தில் இபிஎஸ் பேசிய வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகிறது.
சீமான் விமர்சனம்:
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நவம்பர் 1 ஆன் தேதி சென்னையில் நடந்த தமிழ்நாடு நாள் எழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "திமுகவிலும் அதிமுகவிலும் 'சுயமரியாதை' என்ற வார்த்தையைப் பற்றிச் சொல்லும்போது, முதலில் அந்தக் கேள்வியை கேட்கவேண்டும் அந்தக் கண்ணோட்டத்துக்கு தகுதியுள்ளவர்களா என்று. சமூக நீதி, சமத்துவம் என்று கருதியவர்கள் உண்மையில் அவற்றை கடைப்பிடிக்கிறார்களா?" என்றார்.
குறிப்பாக :"எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி , முதலமைச்சர் பதவியை சசிகலா அறிவிக்கையில் காலில் தவழ்ந்து கும்பிட்டார் இதுதான் சுயமரியாதையா?" - என்று சீமான கடுமையாக விமர்சித்து இருந்தார்.
அதிமுகவினர் கேள்வி:
சீமானின் இந்த விமர்சனத்திற்கு அதிமுகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். குறிப்பாக சீமான் - நடிகை விவகாரத்தை எடப்பாடி பழனிச்சாமி மிக நாகரிகமாக கையாண்டார் என்பதை அதிமுகவினர் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ டிரெண்ட் செய்து வருகின்றனர்.
"சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" ❤️
— ஜெயம் அசோக் (@JayamAshok15) November 2, 2025
சீமான் விஜயலட்சுமி குறித்த கேள்விக்கு எடப்பாடியார் கொடுத்த பதில்....
ஆனா பொம்பள கேஸில் மன்னிப்பு கேட்ட சீமான், தரம் தாழ்ந்த விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார் pic.twitter.com/93kg0GwxqQ
அந்த வீடியோவில் செய்தியாளர்கள் இபிஎஸ்-யிடம் சீமான் மற்றும் நடிகை விவாகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து பதிலளித்த இபிஎஸ், இந்த விவகாரம் அவர்கள் இருவரின் தனிப்பட்ட பிரச்சனை, இதை குறித்து பொதுவெளியில் பேசுவது சரியாக இருக்காது. அவரும் கட்சியின் தலைவர் நானும் ஒரு கட்சியின் தலைவர். இது மாதிரியான கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
செய்தியாளர் : சீமான் விஜயலட்சுமி பிரச்சனை பற்றிய உங்கள் கருத்து என்ன ஐயா
— M.Krishnavijay Sivagangai (@Krishnavijay152) November 2, 2025
எடப்பாடியார் : அத பத்தில்லாம் நாங்க பேச கூடாதுங்க, மற்றவர்களின் சொந்த விசயத்தில் நாம் தலையீட கூடாது.
அவருடைய அரசியல் பற்றி கேளுங்க பதில் சொல்றேன்.
8% வரை வாக்கு வங்கி வைத்திருந்த சீமான், 2 வருடத்தில் 2%… pic.twitter.com/QGcfU8vxwH
ஆனால் சீமானின் பேச்சு அரசியல் நாகரிகமற்றதாக இருப்பதாகவும் இபிஎஸ் பேசிய வீடியோவில் அவர் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்துக்கொண்டார், இது தான் அரசியல் நாகரிகம் என்று அதிமுகவினர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்






















