முதல்வர் வெளிநாட்டுப் பயணங்கள்: 10.62 லட்சம் கோடி முதலீடு, 32.81 லட்சம் வேலைவாய்ப்பு உண்மையா? எடப்பாடி கேள்வி!
2021-க்கு முன்பு எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட முதலீடுகளையும், திமுக தனது சாதனையாகக் கூறிக்கொள்வதுதான் விந்தை என ஈபிஎஸ் கேள்வி

வெளிநாட்டு சுற்றுப் பயணம் செல்லும் முன்பு 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூ 10.62 லட்சம்கோடி முதலீடுசெய்து 32.81 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கிவிட்டதாகவும், தமிழக இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்டை பெற்றுவிட்டது போலவும் மார் தட்டும் பொம்மை முதலமைச்சர் முழு விவரங்களையும் தைரியமாக வெளியிடத் தயாரா?
முழு விவரங்களையும் தைரியமாக வெளியிடத் தயாரா? என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2021, தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது சுமார் 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளித்துவிட்டு, தற்போது 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம், 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று மேடைதோறும் பச்சைப் பொய் பேசி, மக்களின் காதுகளில் பூச்சூடி வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசு சதவீத கணக்கில் 70 சதவீதம் என்றும், 77 சதவீதம் என்றும் முதலீடுகளை ஈர்த்தது பற்றி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினும், தொழில்துறை அமைச்சரும் முதலீடு வந்துவிட்டது போலவும், வேலை வாய்ப்பு இலட்சக் கணக்கில் உருவாகிவிட்டது போலவும் (எக்ஸ் வலைதள) அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
2022, மார்ச் 24 முதல் 29 வரை துபாய்க்கு முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நோபல் ஸ்டீல் 1000 கோடி, லூலூ மால் 3,500 கோடி, ட்ரான்ஸ்வோல்ட், வைட்ஹவுஸ் மற்றும் ஆஸ்டர்டாம் ஹெல்த் கேர் என்று ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 6,100 கோடி ரூபாய்க்கு முதலீடு என்று அறிக்கை
வெளியிட்டார்கள். இதன்படி ஆறு நிறுவனங்களும் தொழிலை ஆரம்பித்து விட்டனவா? எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது ? முழு விவரம் என்ன?- யாருக்கும் தெரியாது.
இரண்டாவதாக, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு ஒன்பது நாள் பயணம் மேற்கொண்டு 3,233 கோடி ரூபாய் முதலீடு பெற்று, 5000 வேலைவாய்ப்பை உருவாக்கப் போட்ட 13 ஒப்பந்தங்களில் எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளது? எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது ? முழு விவரம் என்ன? யாருக்கும் தெரியாது.
மூன்றாவதாக, ஸ்பெயினுக்கு 2024-ஆம் ஆண்டு ஜனவரி 28 முதல் பிப்ரவரி 7 வரை சென்று 3,440 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்தோம் என்றும் கூறினார்கள். அந்த முதலீட்டில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது ? முழு விவரம் என்ன? - யாருக்கும் தெரியாது.
4-ம் முறையாக 2024, ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 12 வரை 17 நாட்கள் அமெரிக்காவுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு 11,516 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 7,618 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக போடப்பட்டு அறிக்கை வெளியிட்டார்கள். எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது ? முழு விவரம் என்ன? - யாருக்கும் தெரியாது.
தற்போது திரு. ஸ்டாலின், ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஐந்தாவது முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு 15,516 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 17,613 வேலைவாய்ப்பை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இவைகளெல்லாம், இவர்களின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் விவரங்கள்தான்.
இதைத் தவிர, உலக முதலீட்டாளர் மாநாடு 2024, ஜனவரி 7, 8 தேதிகளில் நடத்தப்பட்டு 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாகவும், அதன்மூலம் 14.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி, திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின் 9.74 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து 27 தொழிற்சாலைகள் தொடங்கி 31 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கியுள்ளதாகக் கூறினார்.
தொழில் துறை அமைச்சரோ, 2025, மே மாதம் 12-ஆம் தேதி தனது அறிக்கையில் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10 லட்சத்து 27 ஆயிரத்து 547 கோடி ரூபாய்க்கு முதலீட்டை ஈர்த்து, 32.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி 70% முதலீட்டைப் பெற்றுவிட்டதாகக் கூறினார்.
கடைசியாக திரு. ஸ்டாலின் 30.8.2025 அன்று வெளிநாடு செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 922 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 10.62 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, 32.81 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி 77 சதவீதம் செயல்முறைப்படுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இவர்கள் கூறுவதைப் போல் 10.62 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள், 922 ஒப்பந்தங்கள் யாருடன் போடப்பட்டது ? 32.81 லட்சம் நபர்களுக்கு யார் வேலைவாய்ப்பு தந்தார்கள் ? இவற்றில் உண்மையாக நடைமுறைக்கு வந்த ஒப்பந்தங்கள், செயல்பாட்டிற்கு வந்த தொழிற்சாலைகள், உண்மையில் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை என்ன என்று யாருக்கும் தெரியாது. எக்ஸ் தளத்தின் மூலமே விளம்பரம் தேடும் விடியா திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு, இந்த விவரங்களை ஏன் முழுமையாக வலைதளத்தில் வெளியிடுவதில்லை.
மேலும் திரு. ஸ்டாலின், ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக தற்போது அறிவித்துள்ள நிறுவனங்களில் பல ஏற்கெனவே தமிழகத்தில் தங்களது தொழில்களை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இங்கே நடைபெற்று வரும் தொழில்களை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தங்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று கையொப்பம் வாங்கியதற்கு பதிலாக, இங்கேயே ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கலாமே என்று தொழில் துறையினர் கூறுகின்றனர்.
இதில் 2021-க்கு முன்பு எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட முதலீடுகளையும், திமுக தனது சாதனையாகக் கூறிக்கொள்வதுதான் விந்தை. எனவேதான், நாங்கள் வெள்ளை அறிக்கை கேட்கிறோம்.
திமுக ஆட்சியின் முதலீடுகளின் நிலை பற்றி ஏன் அறிக்கையாக வெளியிடுவதில்லை ? குறைந்தபட்சம் சட்டமன்றத்தில்கூட இதுபற்றி அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதில்லையே ஏன் ? இந்த மொத்த விவரங்கள்கூட இவர்கள் எக்ஸ் வலைதளத்தில் வெளியிடும் செய்தியில் இருந்துதான் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது என தனது அறிக்கை























