மேலும் அறிய

Video : ”கட்சி மாறி மாறி போறவங்க அறிவுரை எங்களுக்கு தேவையில்லை” வி.பி. துரைசாமியை சாடிய ஈபிஎஸ்

ஒரே கூட்டணியில் உள்ள அதிமுக - பாஜக தலைவர்களின் கருத்து மோதலால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும் அளவுக்கு இல்லை என்றும், பாஜக மட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கருத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன் ராயப்பேட்டை அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், அமைப்பு செயலாளருமான பொன்னையன் பேசியது பாஜகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதாவது பாஜக  அதிமுகவின் கூட்டணி கட்சிதான் என்றாலும், அக்கட்சி தமிழகத்தில் வளர்வது அதிமுகவுக்கு- திராவிட கொள்கைகளுக்கு- தமிழக நலனுக்கு நல்லதல்ல என்று கூறினார். 

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர நினைப்பதை மக்கள் விரும்ப மாட்டார்கள். பாஜக எதிர்க்கட்சி என்ற மாயை பிம்பம் உருவாக்கப்படுகிறது. இதனை நம்முடைய ஐடி விங் நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும் என பொன்னையன் தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகத்தில் பாஜக வளர்கிறது. ஆனால் பொன்னையன் வளரவில்லை என்ற ஆதங்கத்தில் அவர் பேசியதாக விமர்சித்திருந்தார். 

இதேபோல ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்காத ஆதங்கத்தில் பொன்னையன் பேசுகிறார். கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த அவர் முயற்சிக்கிறார் என பாஜக மாநிலத் துணை தலைவர் வி.பி.துரைசாமி பதிலடி கொடுத்தார். தற்போது விபி துரைசாமியின் இந்த கருத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், துரைசாமி அதிமுகவிற்கு சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை.அ.தி.மு.க., மக்கள் பிரச்னைகளை பேரவையில் எப்படி எழுப்புகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில், பா.ஜ.,வின் சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டசபையில் எப்படி செயல்படுகிறார் என்பது, மக்களுக்கு நன்றாக தெரியும்,'' என்றார். 

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கட்சி கூட்டணி வைத்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது. ஆனால், அதன்பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவினர் தனித்து போட்டியிட்டனர். இருப்பினும் பெரும்பாலான இடங்களில் ஆளும்கட்சியான திமுகவினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றது.  இந்தநிலையில் ஒரே கூட்டணியில் உள்ள அதிமுக - பாஜக தலைவர்களின் கருத்து மோதலால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget