DMK Youth Wing Conference: தடபுடலாக தயாராகும் சேலம்! ஏற்பாடுகளை கேட்டா அசந்து போவீங்க! களைகட்ட போகும் திமுக இளைஞர் அணி மாநாடு!
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைக்கிறார்.
![DMK Youth Wing Conference: தடபுடலாக தயாராகும் சேலம்! ஏற்பாடுகளை கேட்டா அசந்து போவீங்க! களைகட்ட போகும் திமுக இளைஞர் அணி மாநாடு! DMK Youth Wing Conference - Five lakh people are expected to participate. DMK Youth Wing Conference: தடபுடலாக தயாராகும் சேலம்! ஏற்பாடுகளை கேட்டா அசந்து போவீங்க! களைகட்ட போகும் திமுக இளைஞர் அணி மாநாடு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/d24761100d9b223a3c5ab398350dbbb41705658164853113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு நாளை மறுதினம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. மாநாடு ஏற்பாடுகள் குறித்து திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு ஆய்வு செய்தார். இளைஞரணி மாநாட்டின் போது கட்சி நிர்வாகிகள் அமரும் இருக்கைகள், அவர்களுக்கான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, "மாநாட்டு பந்தலில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட உள்ளதாகவும், மாநாட்டின் பந்தலின் உள்ளே இரண்டரை லட்சம் பேரும் மாநாடு சுற்றியுள்ள இடங்களில் 2.5 லட்சம் பேரும் என ஐந்து லட்சம் பேர் பங்கேற்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்காக 300 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் ஜிபிஎஸ் முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு அதற்கான பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருப்பதாக” தெரிவித்தார்.
மேலும் மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் சைவம் மற்றும் அசைவம் உணவுகள் மதியம் வழங்கிட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் மாநாட்டு திடலில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.
சேலம் திமுக இளைஞரரை மாநாட்டில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் நாளை மாலை 5 மணிக்கு விமானத்தில் சேலம் வருகை தர உள்ளதாக குறிப்பிட்ட அவர் அங்கிருந்து மாநாட்டு பந்தலுக்கு வருகை தரும் முதல்வர் சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட சுடரை வாங்கி சுடரை ஏற்றி வைக்க உள்ளதாகவும் நீட் தேர்வு ஒழிப்புக்காக நடைபெற்று வரும் இருசக்கர வாகன பேரணியையும் முதலமைச்சர் பார்வையிட உள்ளதாகவும் கூறினார். இதனை அடுத்து 1500 டிரோன்கள் பங்கேற்புடன் பிரம்மாண்ட ட்ரோன் ஷோ முதலமைச்சர் முன்னிலையில் நடக்க உள்ளதாகவும் அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார்.
மேலும் இளைஞரணி மாநாடு நடைபெற உள்ள ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்க உள்ளதாகவும் மாநாட்டு பந்தலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைக்க உள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் கே என் நேரு மாநாட்டினையொட்டி முக்கிய தலைவர்களின் சிலைகள் திறக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
மாநாடு இளைஞரணி செயலாளர் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிவதுடன் தொடங்குவதாகவும் மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட திமுக முன்னணி தலைவர்கள் பேச உள்ளதாகவும் அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டார். மாலையில் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இளைஞரணி செயலாளர் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மாநாட்டு சிறப்புரை ஆற்ற உள்ளதாகவும், அமைச்சர் கே என் நேரு குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த மாநாடாக சேலம் திமுக இளைஞர் அணி மாநாடு அமையும் என்றும் அமைச்சர் கே என் நேரு நம்பிக்கை தெரிவித்தார்.
ஆய்வின் போது திமுக மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி, ராஜேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)