மேலும் அறிய

“சீட் வழங்கலில் அதிருப்தி” – திமுகவில் போர்க்கொடி தூக்கிய தொண்டர்கள்...

மேட்டுப்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பில் அதிருப்தி, தொண்டர்கள் போர்க்கொடி.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு திமுக சார்பில் கவிதா கல்யாணசுந்தரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருகிறது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொகுதியில் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம், தனக்கு சீட் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் செயல்பட்டு வந்தார். அவர் பொதுமக்களிடம் வேஷ்டி, சேலை, பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆதரவை பெருக்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கட்சி தலைமையால் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு வேட்புமனு வழங்கப்பட்டதால், டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பலர் அவரது இல்லம் முன்பு திரண்டு, கட்சியின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

“மக்கள் செல்வாக்கு மிக்கவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரத்துக்கு சீட் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் அவர் சுயேட்சையாகவே போட்டியிடுவார்” என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தன்னைச் சந்திக்க கூட்டமாக வரும் நிர்வாகிகளிடம் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் கண்ணீர் மல்க தனது வேதனையை பகிர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதிக்கான வேட்பாளரை மாற்ற வேண்டும் எனவும், கட்சி தலைமையிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் மேட்டுப்பாளையம் தொகுதியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
Min Ramesh: ஃபோட்டோஷாப்பில் தமிழை அகற்றி பொய் பரப்புகிறார்கள், சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் வார்னிங்
ஃபோட்டோஷாப்பில் தமிழை அகற்றி பொய் பரப்புகிறார்கள், சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் வார்னிங்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget