மேலும் அறிய
Advertisement
13 கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டாலும் திமுக பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது - பாஜக தலைவர் அண்ணாமலை
’’திமுக தனியாக வர தைரியம் இல்லாமல் 13 கட்சியுடன் களம் கண்டுள்ளனர். ஆனால் பாஜக தனியாக களம் கண்டு தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக வளர்ந்துள்ளது’’
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மனின் கோவிலில் மாசி கொடை விழா நடைபெற்று வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரிசனம் மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவாவிலும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும். மேலும் பஞ்சாபில் காங்கிரஸ் மக்களை எவ்வாறு எல்லாம் சித்திரவதை செய்தார்களோ அதற்கு பதிலடியாக மக்கள் பஞ்சாப்பில் இருந்து காங்கிரசை தூக்க போகிறார்கள். இவை அனைத்தும் மார்ச் 10 ஆம் தேதி சரித்திர நிகழ்வாக அமைய போகிறது. அன்றே2024 யார் வருவார் என்ற பேச்சுக்கும் விடயம் கிடைக்கும்.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 400 எம்.பி க்களுக்கு அதிகமாக பெற்று பாஜக ஆட்சிக்கு வரும். உக்ரைனில் இருந்து 85 முதல் 90 சதவிகிதம் மாணவர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். இன்னும் மாணவர்கள் வர வேண்டும் வந்த பிறகு மாணவர்களிடம் கருத்து கேட்டு இங்கு படிப்பு தொடர்பாக சம்பந்தமாக பரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு எடுக்கும். முதல்வர் என்றால் திடீர் திடீரென எங்கும் செல்ல வேண்டும்.
எல்லா பக்கமும் செல்லும் போது அவர் சார்ந்த தொலைக்காட்சி மைக் மட்டும் திடீர் திடீரென அங்கு வருது அது தான் புரிய வில்லை என்ற அவர், ஆளுங்கட்சி திமுக 13 கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட பிறகும் எங்களை எதிர்த்து பல இடங்களில் டெப்பாசிட் இழந்துள்ளனர். திமுகவின் வேட்பாளர் ஒரு இடத்தில் ஒரு ஒட்டு வாங்கி உள்ளார். திமுக தனியாக வர தைரியம் இல்லாமல் 13 கட்சியுடன் களம் கண்டுள்ளனர். ஆனால் பாஜக தனியாக களம் கண்டு தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக வளர்ந்துள்ளது என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion