Dailyhunt Survey: மூன்றாவது முறையாக மோடி மேஜிக்.. டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
Dailyhunt Opinion Poll: பெரும்பாலான மாநிலங்களில் மோடியே ஆதிக்கம் செலுத்துவதாக டெய்லிஹண்ட் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 19ஆம் தேதி, மக்களவைத் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துடன் டெய்லிஹண்ட் இணைந்து நாடு முழுவதும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. கடந்த இரண்டு மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால், இந்த முறை அக்கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கருத்துக்கணிப்பில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 77 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். ஆன்லைனில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்படுவதாக 61 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரதமராக மோடியே தொடர வேண்டும் என 64 சதவிகிதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என 21.8 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக/தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும் என 63 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர்.
மாநில வாரியாக பார்த்தால் பெரும்பாலான மாநிலங்களில் மோடிக்கே ஆதரவு இருப்பதாக தெரிகிறது. தலைநகர் டெல்லியில் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 57.7 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி, பிரதமராக வர வேண்டும் என 24.2 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடரும் பிரதமர் மோடியின் ஆதிக்கம்:
உத்தர பிரதேசத்தில் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 78.2 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி, பிரதமராக வர வேண்டும் என 10 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர்.
மேற்குவங்கத்தை பொறுத்தவரையில், மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 62.6 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி, பிரதமராக வர வேண்டும் என 19.6 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 43.2 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி, பிரதமராக வர வேண்டும் என 44.1 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். கேரளாவில் மோடி, ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 40.8 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி, பிரதமராக வர வேண்டும் என 40.5 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். தெலங்கானாவில் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 60.1 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி, பிரதமராக வர வேண்டும் என 26.5 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேசிய அவசர காலங்களில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டதாக 63.6% பேர் கூறியுள்ளனர். 20.5% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.