Stalin Letter to Yediyurappa: | 'குடிநீர் தேவை என்பதை ஏற்க முடியாது' - மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய பதில் கடிதம்!
மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா.
மேகதாது அணை திட்டத்தைக் கைவிட வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தத் திட்டம் வந்தால் தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் வரத்து பாதிக்கப்படும் என்றும் மேலும் அணைகட்டும் விவகாரத்தில் பல விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் குடிநீர் தேவைக்காகத்தான் அணைதிட்டம் என்கிற காரணத்தை ஏற்கமுடியாது என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் வராது என எடியூரப்பா முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருந்த நிலையில் அதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் . மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா. இதற்கிடையே ஸ்டாலின் இந்த பதில் கடிதத்தை எழுதியுள்ளார். தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இது முதல் கடிதப் போக்குவரத்து ஆகும்.