மேலும் அறிய

" ஜெயலலிதா பரவாயில்லை, எடப்பாடி பழனிசாமிதான் சரியில்லை” - அமைச்சர் தாமோ அன்பரசன்

1200 பயனாளிகளுக்கு ரூ.14.72 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற சாதனை விளக்க விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத்  தலைமையில்  குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  இன்று  1200 பயனாளிகளுக்கு ரூ.14.72 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
நான் முதல்வன் திட்டம்
 
இந்நிகழ்ச்சியில்  குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமு அன்பரசன் பேசுகையில், ”இன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில்,1200 பயனாளிகளுக்கு ரூ.14.72 கோடி மதிப்பீட்டிலான அரசு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. நமது செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஈராண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பல்வேறு தரப்பு பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் காலை உணவுத் திட்டத்தின் கீழ்  18 லட்சம் தொடக்க பள்ளி மாணவ – மாணவியர்களுக்கு ரூ.500 கோடியில் காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் சுயமாக தொழில் தொடங்க திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் “நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு 12.72 லட்சம் கல்லூரி மாணவ – மாணவியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது
 
திருமண உதவி திட்டம்
 
"கலைஞர் கருணாநிதி அவர்கள் 1989 ஆம் ஆண்டு, தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வந்தபொழுது ,  இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் திருமண உதவி திட்டம் கொண்டுவரப்பட்டது.  எட்டாம் வகுப்பு வரை படித்திருந்த பெண்களுக்கு திருமண உதவி தொகையாக 5000 ரூபாய் வழங்கப்பட்டது. கலைஞர் கருணாநிதி அவர்கள் உதவித்தொகையை படிப்படியாக உயர்த்தி 25,000 ரூபாய் வரை வழங்கினார். அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார், பட்டப்படிப்பு பெண்கள் திருமண உதவித் தொகைக்கு விண்ணப்பித்தால் 50 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்குவதாக அறிவித்தார்.
 
மேலும் 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவித்தார். நாங்கள் எல்லாம் சந்தோஷப்பட்டோம். அந்தஅம்மா இருக்கும் வரை அந்த திட்டத்தை ஒழுங்காக நடத்தினார்கள். அந்த அம்மா போன பிறகு, ஒருவர் முதலமைச்சராக வந்தார். தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர், விண்ணப்பித்தனர், ஆனால் அவற்றை தங்கம் விலை உயர்ந்து விட்டதாக கூறி கிடப்பில் போட்டவர்தான்,  அப்பொழுதே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிதி நெருக்கடி இருந்தாலும் பரவாயில்லை அவற்றை கொடுத்து முடியுங்கள் என உத்தரவிட்டார்" என அமைச்சர் தாமோ அன்பரசன் பேசினார்.
 
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல் ராஜ், செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாகிதா பர்வின், ஊரக வளர்ச்சித் முகமை திட்ட அலுவலர் இந்துபாலா, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் இதயவர்மன், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் உதயா கருணாகரன், இலத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுப்புலட்சுமி பாபு, புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத் தலைவர் சங்கீதா பாரதிராஜன், செங்கல்பட்டு நகராட்சி நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகர் நகராட்சி நகர்மன்ற தலைவர் சண்முகம், துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
Embed widget