மேலும் அறிய

"முதலில் ஓபிஎஸ்; இப்போது இபிஎஸ்; இது பாஜகவின் விளையாட்டு" - கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

வருமான வரித்துறை அமலாக்க பிரிவு, சி.பி.ஐ என்னும் வரிசையில் பா.ஜ.க.வின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு நீதித் துறையும் பயன்படுத்தப்படுகிறது என்பது அப்பட்டமாகவே தெரிகிறது.

எடப்பாடிக்கு சாதகமாக பொதுக்குழு தீர்ப்பு வந்ததை அடுத்து ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் பாஜக, அண்ணாமலை, எடப்பாடி, மற்றும் நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்து ஒருமுகநூல் பதிவை வெளியிட்டுள்ளார்.

மருது அழகுராஜ்

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்த ‘நமது எம்ஜிஆர்’ நாளிதழின் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் சசிகலா தரப்பினர் கைக்கு சென்றதும், நமது எம்ஜிஆர் நாளிதழில் இருந்து மருது அழகுராஜ் வெளியேற்றப்பட்டார். முன்பு சசிகலாவை கடுமையாக விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், ஓபிஎஸ்- ஈபிஎஸ் வசம் அதிமுக சென்றதும் ‘நமது அம்மா’ என்ற நாளிதழ் தொடங்கப்பட்டபோது அதற்கு மருது அழகுராஜ் தான் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கூட இவருக்குப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவர், அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தபோது, ஓபிஸ் ஆதரவாளராக இருந்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்ட நிலையில், பாஜக எடப்பாடிக்கு வேண்டியதை செய்வதாகவும், நீதிமன்றங்களும் சிபிஐ மற்றும் அமலாக்க துறை போல பாஜகவின் ஆயுதமாக மாறிவிட்டதாகவும் விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ஆடும் ஆட்டுக்குட்டியும்

ஆடும் ஆட்டுக்குட்டியும் என்று தலைப்பிடப்பட்ட இந்த பதிவில் அவர், "மராட்டிய மாநிலத்தின் சிவசேனா அரசியலை, பா.ஜ.க.வுக்கு பல்லக்கு தூக்கும் ஷிண்டேவ நோக்கி நகர்த்தியது போலவே, தமிழ் நாட்டிலும் அண்ணா தி.மு.க. அரசியலை அதே பா.ஜ.க.வுடன் 2024-நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கும் அண்ணாமலை உறவினர் எடப்பாடியை நோக்கி அதே நீதிமன்றம் வழியாக நகர்த்தி இருக்கிறது காவிக் கட்சி. இது என் போன்றோர் எதிர்பார்த்த ஒன்று தான்", என்று எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்: Indonesia Earthquake: இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு: பீதியில் மக்கள்..

பாஜகவின் அரசியல் சூதாட்டம்

மேலும் அந்த பதிவில், "2017-ல் எப்படி சசிகலாவுக்கு எதிராக நீதிமன்றம் மூலமாக விரும்பிய தீர்ப்பை விரும்பிய வேகத்தில் வரவழைத்து அடிமை எடப்பாடி ஆட்சிக்கு அடித்தளம் அமைத்து தரப்பட்டதோ, அது போலவே இப்போதும் அதே பா.ஜ.க.வின் அரசியல் ஆதாயச் சூதாட்டம் மீண்டும் அரங்கேறி இருக்கிறது. ஈரோட்டு கிழக்கு இடைத்தேர்தல் வாக்களிப்புக்கு சிலமணி நேரங்களே எஞ்சியிருக்கும் நிலையில் பல வாரங்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த தீர்ப்பு இடைத் தேர்தல் வாக்களிப்பில் மக்களிடம் சலனத்தை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் உச்சநீதிமன்றம் அதனை கருத்தின் கொள்ளாது செயல் பட்டிருக்கிறது.", என்று எழுதியிருக்கிறார்.

எடப்பாடியின் அற்புதவிளக்கு

மேலும்,"அது சரி இது போன்ற வாய்ப்புகள் எதிர்கட்சிகள் எதற்கும் கிட்டாத சந்தர்ப்பம் என்பதை சாமானிய மக்களாலும் புரிந்து கொள்ள முடியும். ஆக.. வருமான வரித்துறை அமலாக்க பிரிவு, சி.பி.ஐ என்னும் வரிசையில் பா.ஜ.க.வின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு நீதித் துறையும் பயன்படுத்தப்படுகிறது என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. பதினோரு எம்.எல்.ஏக்களை மட்டுமே தன் வசம் வைத்திருந்த அன்றைய பா.ஜ.க. ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு இரட்டை இலை சின்னத்துக்கான உரிமை தொடங்கி பல சாதகங்கள் அன்று  கிடைத்தன என்றால் இப்போது அந்த அரவணைப்பு எடப்பாடியை நோக்கி நகர்ந்து விட்ட நிலையில் எடப்பாடி கைகளில் வேண்டியதை தருகிற அலாவுதீனின் அற்புத விளக்கு இருப்பதற்கு சமம் தானே.. ஆனாலும் ஆட்டுக்கு தீனி போட்டு வளர்க்கும் பாசம் எல்லாம் தேர்தல் திருவிழா வரைக்கும் தான் என்பது ஆட்டுக்கும் அதனை ஏற்பாடு செய்திருக்கும் ஆட்டுக் குட்டிக்கும் பொருந்தும் தானே…", என்று அவரது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget