Adipurush: ஆதிபுருஷ் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்- எச்சரிக்கும் உத்தரபிரதேச அமைச்சர்கள்!
Adipurush: ஆதிபுருஷ் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்.
ராமயணத்தை அடிப்படையாக கொண்ட ஆதிபுருஷ் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று உத்தரபிரதேச துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா (Kesav Prasad Maurya) மற்றும் பிரஜேஷ் பதக் (Brajesh Pathak) ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும்படியான காட்சிகளை நீக்காவிட்டால், சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
ராமர், அனுமன் மற்றும் ராவணன் ஆகியோரை தவறாக சித்தரித்ததாகக் கூறப்படும் பாலிவுட் படமான ஆதிபுருஷ் படத்தின் டீஸர் தொடர்பாக தொடர்ந்து வரும் சர்ச்சைக்கு மத்தியில், அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி, இந்தத் படத்தை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ராமர், அனுமன் மற்றும் ராவணன் ஆகியோர் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், இதிகாசத்தில் உள்ளதுபோல, திரைப்படத்தில் இல்லை என்றும் கூறியிருந்தார். திரைப்படம் தயாரிப்பது குற்றமல்ல, ஆனால் அவை வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கவோ, அதை பிரபலப்படுத்தக் கூடாது என்று தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்
இந்தப் படத்தின் 1.46 நிமிட டீசர் ஞாயிற்றுக்கிழமை அயோத்தியில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோர் இந்த டீஸருக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களை இழிவுபடுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர்.
"திரைப்படங்கள் பெரும்பாலும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றன. நமது கலாச்சாரத்தைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்று பதக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கேசவ் மவுரியா தான் டீசரைப் பார்க்கவில்லை; ஆனால், அது மத உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அதை பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கு முன்பு அதை சரிசெய்ய வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக, பாஜக செய்தித் தொடர்பாளர் மாளவிகா அவினாஷ் கூறுகையில், ராவணன் கதாபாத்திரத்தை உருவாக்குவதற்கு முன் படத்தின் தயாரிப்பாளர்கள் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை. " திரைப்பட போஸ்டரில் இருக்கும் ராவணன் இந்தியராக தெரியவில்லை. அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்து எங்கள் வரலாறு; படைப்பு சுதந்திரம் என்ற போர்வையில் அதைச் செய்ய முடியாது," என்று அவர் கூறினார்.
டீஸருக்கு எதிர்ப்பு தெரிவித்த விஸ்வ ஹிந்து பரிஷத், ராமர், ராவணன், லட்சுமணன் ஆகியோர் சித்தரிக்கப்பட்ட விதம் இந்து மதத்தை கேலிக்கூத்தாக்குவதுபோல் உள்ளது. "இந்து சமுதாயத்தின் விழுமியங்கள் கேலி செய்யப்பட்டுள்ளன. இதை இந்து சமுதாயம் பொறுத்துக்கொள்ளாது" என்று அஜய் சர்மா கூறினார். மேலும், இந்த படத்தை திரையரங்குகளில் திரையிட வி.எச்.பி. அனுமதிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்து மத பிரமுகர்களை தவறாகக் காட்டும் காட்சிகளை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா (Narottam Mishra) எச்சரிக்கை விடுத்துள்ளார். . “ஹனுமான் லெதர் அணிந்திருப்பதாக காட்டப்படுகிறது. அதேசமயம் (வேதங்களில்) தெய்வத்தின் உடையின் விளக்கம் வித்தியாசமாக உள்ளது.. இவை மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள். இதுபோன்ற காட்சிகளை படத்தில் இருந்து நீக்குமாறு ஓம் ரவுத்துக்கு கடிதம் எழுதுகிறேன். நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்று மிஸ்ரா கூறியுள்ளார்.