மேலும் அறிய

ராகுலை சதாம் உசேன் என்று சொன்ன அசாம் முதல்வர்.. சகஜமப்பா என்ற அமித்ஷா! சூடுபிடிக்கும் குஜராத் தேர்தல்..

தேர்தல் பரப்புரையில் இருந்த ஹிமந்தா தனது பேச்சின் இடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தோற்றம் குறித்து கிண்டலாக பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

குஜராத் தேர்தல் பரப்புரையில் இருந்த அசாம் முதல்வர் ஹிமந்தா தனது பேச்சின் இடையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தோற்றம் குறித்து கிண்டலாக பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதற்கு அமித்ஷா அளித்த பதிலும் விவாதத்திற்குள்ளாகி உள்ளது.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்

குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற பல ஆண்டுகளாக குஜராத்தை ஆளும் பாஜக-வும் எதிர்க்கட்சியான காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக சார்பில் அந்தக் கட்சியின் முன்னணி தலைவரும் அசாம் மாநில முதலமைச்சருமான ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் செவ்வாய் கிழமை அன்று தேர்தல் பரப்புரையில் இருந்த ஹிமந்தா தனது பேச்சின் இடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தோற்றம் குறித்து கிண்டலாக பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ராகுலை சதாம் உசேன் என்று சொன்ன அசாம் முதல்வர்.. சகஜமப்பா என்ற அமித்ஷா! சூடுபிடிக்கும் குஜராத் தேர்தல்..

ராகுலின் தோற்றம் குறித்து பேசிய முதல்வர்

அந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா, "பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமைக்காக யாத்திரை) மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் தோற்றத்தை நான் பார்த்தேன். யாத்திரையில் அவரின் லுக் மாறியுள்ளது. ஒருவர் புதிய லுக்கில் தோற்றமளிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ராகுல் காந்தி தனது தோற்றத்தை சர்தார் வல்லபாய் பட்டேல் போலவோ, மஹாத்மா காந்தி போலவோ மாற்றினால் நல்லதுதான்", என்று ராகுலின் சமீபத்திய தாடி வைத்த தோற்றத்தை பற்றி பேசினார்.

தொடர்புடைய செய்திகள்: இன்னும் சிங்கிளாக இருப்பது ஏன்? ரசிகர்களின் கேள்விக்கு ஜாலியாக பதிலளித்த அதர்வா!

சதாம் உசேன்போல உள்ளார்

மேலும் பேசிய அவர், "நேரு போல தனது தோற்றத்தை மாற்றினால் கூட சரிதான். ஆனால் எதற்கு சதாம் உசேன் போல முகத் தோற்றத்தை மாற்ற வேண்டும்" என்று கூறி கலாய்த்து விமர்சித்திருந்தார். பரப்புரையில் இவ்வாறு பேசிய ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவுக்கு காங்கிரஸ் தலைவர்களும், பிரமுகர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

ராகுலை சதாம் உசேன் என்று சொன்ன அசாம் முதல்வர்.. சகஜமப்பா என்ற அமித்ஷா! சூடுபிடிக்கும் குஜராத் தேர்தல்..

அமித்ஷா கருத்து

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வும் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று நடத்திய நிகழ்வில் பங்கேற்று பேசிய அமித் ஷாவிடம் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அமித்ஷா, "பரபரப்பான தேர்தல் களத்தில் இது போன்ற பேச்சுக்கள் வருவது மிகவும் இயல்பு. மக்கள் இதை கேட்பார்கள், மகிழ்வார்கள், சிரிப்பார்கள்… ஆனால், தேர்தலில், ஓட்டளிப்பது போன்றவற்றில் எந்த மாறுதல்களும் ஏற்படாது. எனவே, தேர்தல் காலத்தில் பேசப்படும் இதுபோன்ற பேச்சுக்களை ஜவ்வாக இழுக்கவேண்டிய தேவையில்ல", என்று கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget