மேலும் அறிய

நான் ஊழலுக்கு எதிராகவும், குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் லேகியம் விற்கிறேன் - அண்ணாமலை

ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் 2 நவோதயா பள்ளிகள் உருவாக்கப்படும் - அண்ணாமலை

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் என் மண், என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மயிலம் சாலையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் பாதயாத்திரையாக நடந்துசென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது பொதுமக்கள் பலரும் அவரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். சிலர், அண்ணாமலையுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இந்த யாத்திரை கூட்டேரிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் முடிவடைந்தது.

பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் 228 தொகுதிகளை நேற்று முன்தினம் வரை கடந்திருக்கிறோம். நாளை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் யாத்திரையின் நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த மண்ணின் மீது இருக்கிற காதலால், மரியாதையால் யாத்திரை நிறைவு விழாவில் மோடி பங்கேற்க உள்ளார். இன்னும் ஒரு மாத காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. உங்கள் வாக்குகளை செலுத்தப்போகிறீர்கள். இது மிக முக்கியமான தேர்தல். இதுவரை எத்தனையோ நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்கள் நடந்தாலும் இந்த தேர்தல் மோடி வெற்றி பெறப்போகிற தேர்தல். இந்தியா முழுவதும் 400 தொகுதிகளை தாண்டி வெற்றிபெற்று மோடி ஆட்சி அமைக்கப்போகிறார் என்பது எல்லோருக்கும் உறுதியாக தெரியும். வாக்களிப்பதற்கு முன்பு, நமது கையில் மையை வைப்பதற்கு முன்பு, அந்த மை காய்வதற்கு முன்பு மோடிதான் வெற்றி பெறப்போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்து வாக்களிக்கக்கூடிய தேர்தல் இது. ஏனெனில் மோடி, இந்த 10 ஆண்டுகளில் நல்லாட்சியை, நியாயமான ஆட்சியை செய்திருக்கிறார்.

வேலைவாய்ப்பு


பாஜக பொறுத்தவரை என் மண், என் மக்கள் என்று யாத்திரை நடத்துகிறோம். ஆனால் தி.மு.க. என் மகன், என் மருமகன் என்றுதான் சொல்வார்கள். இதுதான் அவர்களுக்கும், நமக்கும் இருக்கிற அடிப்படை வித்தியாசம். இந்த மண்ணையும், மக்களையும் காக்க வேண்டும், அதுதான் பாஜகவின் நோக்கம். இன்றைக்கு படித்த இளைஞர்களுக்கு அவர்களது படிப்பிற்கு தகுந்தாற்போன்று வேலைவாய்ப்பு இல்லை. ஆண்ட கட்சிக்கும், ஆளுகிற கட்சிக்கும் ஓட்டுப்போட்டு நம்முடைய கைரேகை தேய்ந்ததுதான் மிச்சம். இந்த முறை 400 நாடாளுமன்ற தொகுதிகளை தாண்டி மோடியை வெற்றி பெற வைக்க மக்களின் ஆதரவு என்பது பிரமிக்க வைக்கிறது.

மோடிக்கு ஓட்டுப்போட்டால் என்ன கிடைக்கும். லஞ்சம், லாவண்யம் இல்லாத அரசு தருவோம். வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு கிடைக்கும், கியாஸ் சிலிண்டர் மானியம் கிடைக்கும். விவசாய விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை கிடைக்கும், விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும், முத்ரா கடன் திட்டம் இப்படி எல்லாமே வீடு தேடி வரும். 2024 தேர்தலில் மோடியை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க உள்ள நீங்கள் அதே நம்பிக்கையுடன் 2026 தேர்தலிலும் தமிழகத்தில் பா.ஜனதாவை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தால் அரசு வேலைவாய்ப்பை உறுதி செய்வோம். இதுவரை எந்தெந்த குழந்தைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கவில்லையோ அந்த குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்போம்.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதில் தி.மு.க. தலைவர்களை தவிர எல்லோரும் தெளிவாக இருக்கிறார்கள். டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் போன்றோரின் சாராய கம்பெனிகளுக்காகத்தான் டாஸ்மாக் கடைகளை நடத்துகின்றனர். 2026-ல் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறப்போம். விவசாயிகளுக்கு நல்ல காலமாக அமையும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் 2 நவோதயா பள்ளிகள் உருவாக்கப்படும்

வசதி படைத்தவர்கள் வீட்டு குழந்தைகளுக்கு கிடைக்கிற கல்வி, உலகத்தரம் வாய்ந்த கல்வி, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்று மோடி நினைக்கிறார். கல்வியில் சம வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்தியா முழுவதும் நவோதயா பள்ளி இருக்கிறது. தமிழகத்தில் இப்பள்ளியை உள்ளே வர திராவிட கட்சிகள் விடுவதில்லை. இங்கு தனியார் பள்ளிகள் அதிகளவில் இருக்கிறது. தமிழகத்தில் ஏன் தனியார் பள்ளிகள் மிக அதிகமாக இருக்கிறது. நவோதயா பள்ளியை உள்ளே விட்டால் தனியார் பள்ளிகளிடமிருந்து நன்கொடைகளை எப்படி வசூலிக்க முடியும்? 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் 2 நவோதயா பள்ளிகள் உருவாக்கப்படும். தமிழகத்தில் ஒரு மாவட்டத்திற்கு 2 பள்ளிகள் வீதம் 78 நவோதயா பள்ளிகளை கர்மவீரர் காமராஜர் பெயரில் கொண்டு வருவோம். உலகத்தரம் வாய்ந்த கல்வி, இலவசமான கல்வியை ஒரு பைசா கூட செலவு இல்லாமல் ஏழை மாணவர்கள் படிக்கலாம். ஆனால் இதை கொண்டுவர விடாமல் தி.மு.க. தடுக்கிறது.

2021 தேர்தல் சமயத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்றார்கள். ஆட்சியிலும் உட்கார வைத்து விட்டீர்கள். ஆனால் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் காப்பாற்றவில்லை. ஒரு ஆண்டுக்கு 70 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். ஆட்சி அமைத்து 2½ ஆண்டுகாலம் முடிந்துவிட்டது. இந்த 2½  ஆண்டு காலத்தில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் வெறும் 10,600 பேருக்குத்தான் வேலைவாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்வீர்களா? டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1, 2, 3, 4 தேர்வு முடிந்து 14 மாதங்கள் ஆகிறது. இன்னும் ரிசல்ட் வரவில்லை. ஏனென்றால் எப்படி கமிஷன் அடிக்க வேண்டும் என்று யோசிக்கிறார்கள்.

2024 நாடாளுமன்ற தேர்தல் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்பக்கூடிய தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். 99 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். சிலிண்டருக்கு மானியம் 100 கிடைத்ததா? 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக ஆக்கினார்களா? கரும்பு டன்னுக்கு ரூ.4,000-ஆக உயர்த்தினார்களா?  நகை கடன், கல்வி கடன்களை தள்ளுபடி செய்தார்களா? பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தார்களா? உயர்கல்வி படிக்கிற மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கினார்களா? ஏற்கனவே மடிக்கணினி கொடுத்ததையும் நிறுத்திவிட்டார்கள்.

பச்சை பொய் சொல்லி வருகிறார் ஸ்டாலின்

ஸ்டாலினுக்கு நாமெல்லாம் சேர்ந்து ஒரு கண்ணாடி வாங்கி கொடுக்க வேண்டும். ஸ்டாலின் அவர்களே, தேர்தலில் கொடுத்த 511 வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளீர்கள் என்பதை நீங்களே ஒருமுறை படித்துப்பார்த்தால் தான் தெரியும். கொடுத்த வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆனால் மேடைக்கு மேடை பச்சை பொய் சொல்லி வருகிறார் ஸ்டாலின். ஆனால் பா.ஜனதாவை பொறுத்தவரை மோடி சிலிண்டருக்கு மானியம் 300, சாதாரண சிலிண்டருக்கு 200 மானியம். இதை நாங்கள் வாக்குறுதியில் சொல்லவில்லை, ஆனால் செய்துள்ளோம். அதுபோல் பெட்ரோல் விலை ரூ.5-ம், டீசல் விலையை ரூ.7-ம் குறைத்துள்ளோம். இதுதான் தி.மு.க.வுக்கும், பா.ஜனதாவுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம். பா.ஜனதா, சொல்லாமலேயே செய்கிற கட்சி. பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது தி.மு.க.

மகளிர்கள் எல்லோருக்கும் உரிமைத்தொகை ரூ.1,000 கொடுப்போம் என்றார்கள். ஆனால் 33 சதவீத மகளிர்களுக்குத்தான் உரிமைத்தொகை கிடைக்கிறது. ஸ்டாலின் மட்டுமல்ல உதயநிதி, அவர்களது குடும்பமே பொய் பேசுகிறது. நீட் தேர்வை ஒழிப்போம் என்றார்கள். ஏழை மாணவர்கள், நீட் மூலம் அரசு மருத்துவர்களாக ஆகிறார்களா, இல்லையா? பொதுமக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

குடும்ப கட்சி

தி.மு.க. பொய் கட்சி, ஊழல் கட்சி, குடும்ப கட்சி. இன்னொரு கட்சியை சொன்னால் அவர்களுக்கு இவர்களே பரவாயில்லை என்று தோன்றுகிறது. இரண்டு கட்சிகளுமே பங்காளி கட்சிகள். தமிழகத்தை இவர்கள் வளர்க்க மாட்டார்கள். பா.ஜனதாவினால் வளர்க்கவும் உதவி செய்ய மாட்டார்கள். ஆகவே நமக்கு ஆண்ட கட்சியும் வேண்டாம், ஆளுகிற கட்சியும் வேண்டாம், மோடி கட்சிதான் வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். தமிழகத்தில் மாற்றம் நிச்சயமாக நடக்கும். பா.ஜனதாவிற்கு மக்கள் என்றென்றும் துணை நிற்க வேண்டும். இந்தமுறை பா.ஜனதாவுக்கு மக்கள் உறுதியாக இருப்பார்கள்.

நான் ஊழலுக்கு எதிராகவும், குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் லேகியம் விற்கிறேன்

என்னைப்பார்த்து ஒரு கட்சியினர் பூச்சாண்டி, மாயாண்டி என்கிறார்கள். மற்றொரு கட்சி லேகியம் விற்கிறார் என்கிறார்கள். ஆமாம், நான் ஊழலுக்கு எதிராகவும், குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் லேகியம் விற்கிறேன். ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று லேகியம் விற்கிறேன். இன்னும் 2 நாட்களில் இந்த யாத்திரை நிறைவு பெறப்போகிறது. இந்த யாத்திரையின் முகமாகத்தான் நான் இருக்கிறேன். ஆனால் கதாநாயகன், கதாநாயகிகள் பொதுமக்களாகிய நீங்கள்தான். மோடியை பார்க்க, இந்த யாத்திரையை ஆசிர்வாதம் செய்ய அனைவரும் பல்லடத்திற்கு வாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget