மேலும் அறிய

Annamalai Press Meet: பார்ட்-4 வரை ஊழல் பட்டியல் வரும்.. திமுக மட்டுமல்ல மற்ற கட்சிகளுக்கும்.. அண்ணாமலை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் ஆட்சி செய்த அனைத்து அரசியல் கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆட்சி செய்த அனைத்து அரசியல்  கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஊழல் தொடர்பான பட்டியல் மேலும் 3 பாகங்களாக வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு:

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ”சுற்றி இருக்கக்கூடிய நண்பர்களின் உதவி கட்சியின் உதவியை வைத்து எனக்கான செலவுகளை செய்து வருகிறேன். எனக்குள்ள 3 உதவியாளர்களின் சம்பளத்தை 3 நண்பர்கள் வழங்குகின்றனர். காருக்கான டீசல் பணத்தை கட்சி வழங்குகிறது. நான் வசிக்கும் வீட்டிற்கான வாடகையை மற்றொருவர் தருகிறார். ஒரு முதல் தலைமுறை அரசியல்வாதிக்கு இருக்ககிற பிரச்னைகள் எனக்கும் உள்ளது. அவற்றை  பல நல்ல மனிதர்களின் உதவியோடு தான் நகர்த்த முடிகிறது.

”இந்த அரசியல் சரிபட்டு வராது”

எதற்கும் துணிந்து தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் உக்கிரமாக இருக்கிறேன். மாலையை போடுவது, கும்புடு போடுவது, தேர்தலின் போது ஒன்றாக சேர்வது போன்ற அரசியல் எனக்கு சரிபட்டு வராது. ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றால் அடிப்படையில் இருந்து எதிர்க்க வேண்டும் என்கிற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். அதனால் இப்போது நீங்கள் பார்த்த திமுக ஃபைல்ஸ் பகுதி ஒன்றுடன் நிற்கப்போவதில்லை. தமிழ்நாடு அரசில் இதுவரை எந்த கட்சிகள் எல்லாம் அமர்ந்து இருக்கிறதோ, அத்தனை கட்சிகளின் ஊழலும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அம்பலப்படுத்தப்படும். 

முடிந்தால் அண்ணாமலையை மாற்றுங்கள்

காரணம் ஊழலை எதிர்க்க வேண்டும் என்றால் மொத்தமாக தான் எதிர்க்க வேண்டும்.  பாதி எல்லாம் எதிர்த்தால் மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வராது. அதனால் அத்தனை பேரையும் எதிர்ப்போம். அப்படி எதிர்க்கக் கூடாது என நினைப்பவர்கள் டெல்லிக்கு சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள். ஆனால் அண்ணாமலை இருக்கும் வரை எதிர்ப்பான். சக்தி இருக்கு, திராணி இருக்கு என நினைப்பவர்கள் சென்று அண்ணாமலையை மாற்றி விட்டு வாருங்கள். காரணம் இது மோடி விரும்புகிற அரசியல், நான் விரும்புகிற அரசியல் கிடையாது. யாருக்கும் பயந்தோ, பணிந்தோ, குணிந்தோ அவர்கள் தயவில் எம்.பி., எம்.எல்.ஏ ஆகவேண்டியதில்லை.  10 தேர்தல்களில் தோற்றாலும் இங்கே தான் நிற்பேன். 

ஆங்கிலேயர்களை மிஞ்சிய கொள்ளை

திமுக செய்த பல தவறுகளை பாஜக தான் சரி செய்து வருகிறது. பட்டியல் நிறைய உள்ளது. முதலமைச்சர் மீது முதல் பட்டியல் இருக்க வேண்டும் என்று தான் இன்றைய பட்டியலை வெளியிட்டுள்ளேன்.  தமிழ்நாட்டின் மொத்த வருமானம் நடப்பாண்டில் ரூ.2.3 லட்சம் கோடி. ஆனால், இவர்களின் பினாமி சொத்துக்களின் மதிப்பு மட்டுமே கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடியை தாண்டுகிறது. குறிப்பிட்ட 13 பேரின் சொத்து மதிப்பு மட்டும் 1.3 லட்சம் கோடி ரூபாயை தாண்டுகிறது. ஆங்கிலேயர்கள் கூட கொள்ளையடிக்காத அளவிலான கொள்ளையை திமுக செய்துள்ளது. உங்களால் என்ன முடியொமோ அதை செய்துகொள்ளுங்கள் ஆனால் நான் அடங்கப்போவதில்லை.

பார்ட்-4 வரை நீளும் ஊழல் பட்டியல்:

மின்சாரத்தை தொட்டுவிட்டோம் இனி அதை விட முடியாது. பார்ட் ஒன்றுடன் நிறுத்த முடியாது. இனி பார்ட் 2, பார்ட் 3 மற்றும் பார்ட் 3 என, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மேலும் 3 பார்ட் ஊழல் பட்டியல் வெளியிடப்படும். வேறு வேறு கட்சிகளையும் இதில் கொண்டு வரத்தான் போகிறோம். அதையெல்லாம் பார்த்துவிட்டு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்” என அண்ணாமலை ஆவேசமாக பேசினார்.

Annamalai Press Meet: பார்ட்-4 வரை ஊழல் பட்டியல் வரும்.. திமுக மட்டுமல்ல மற்ற கட்சிகளுக்கும்.. அண்ணாமலை எச்சரிக்கை

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!
தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Embed widget