மேலும் அறிய
Advertisement
என்எல்சி விவகாரத்தில் ராணுவமே வந்தாலும் நிலத்தை கொடுக்கமாட்டோம் - அன்புமணி ராமதாஸ்
என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்கு நிலம் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாள் பிரச்சார விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொள்கிறார் அன்புமணி ராமதாஸ்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள பழுப்பு நிலக்கரி நிறுவனம் சுரங்க விரிவாக்க பணிக்கு குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, புவனகிரி ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள சுமார் 17 கிராம விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.
கடந்த காலங்களில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கே என்எல்சி நிர்வாகம் இழப்பீடு மற்றும் வேலை வழங்காத நிலையில் என்எல்சிக்கு நிலம் தர மாட்டோம் என விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் என்எல்சி நிர்வாகத்தை வெளியேற வலியுறுத்தியும் விளைநிலங்களை காக்கவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்றும் மற்றும் நாளை இரண்டு நாட்கள் பிரச்சார விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த வாணிதிராயபுரம், தென்குத்து, மந்தாரக்குப்பம், வடக்கு வெள்ளூர்,அம்மேரி, என எட்டு கிராமங்களில் இன்று (நேற்று) நடை பயணம் மேற்கொள்ள நாளை (இன்று) புவனகிரி பகுதியில் நடை பயணம் அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ள உள்ளார்.
நடைபயணம் மேற்கொண்டுள்ள அன்புமணி ராமதாஸ் வானதி ராயபுரத்தில் அமைக்கப்பட்ட திடலில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில் 25,000 ஏக்கர் விலை நிலங்கள் பாதிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் ஏன் போராட்டம் நடத்த வரவில்லை?அன்னூர், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தொழில்பூங்கா அமைக்க நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் அரசியல் கட்சிகள் நெய்வேலிகாக ஏன் போராடவில்லை, அண்ணாமலை,எடப்பாடி பழனிச்சாமி, ஏன் இதற்காக குரல் கொடுக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் 2025 ஆம் ஆண்டுக்குள் என்எல்சி தனியார்மயமாகும் எனவும் மாவட்ட நிர்வாகம் அளிக்கும் இழப்பீடு விவசாயிகளின் நிலங்களை எடுத்துக் கொண்டு பிச்சை போடுவது போன்று உள்ளது என்றும், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் கடந்த 26 ஆம் தேதி என்எல்சி நிலம் எடுப்பு தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ஏன் நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசவில்லை நடைபயணம் என்பது போலியானது என பேசி இருந்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் என்.எல்.சி விவகாரம் தொடர்பாக 15 கேள்விகளை எழுப்பியவன் நான் எனவும் இது சாதாரண பிரச்சனை இல்லை இது கடலூர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த பிரச்சனை நிலத்தடி பாதிப்புக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் வில்லனாக என்எல்சி உள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion