மேலும் அறிய
Advertisement
திரண்ட விசிக தொண்டர்கள்..! காஞ்சியில் பேரணியாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மரியாதை..!
சட்டமேதை அம்பேத்கர் 132 வது பிறந்த நாளை ஒட்டி திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் விசிகவினர் பிரம்மாண்ட பேரணி நடத்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சட்டமேதை அம்பேத்கர் 132 வது பிறந்த நாளை ஒட்டி திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் விசிகவினர் பிரம்மாண்ட பேரணி நடத்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விடுதலை சிறுத்தை
இந்தியா முழுவதும் சட்ட மேதை என புகழப்படும் பாபாசாகிப் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், சமத்துவ நாள் உறுதி மொழியும் ஏற்று அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் விடுதலை சிறுத்தைகள் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் ஓரிக்கை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு, விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநில துணை பொது செயலாளரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி தலைமையில், மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் மாநில வழக்கறிஞர்கள் அணி துணை செயலாளர், தாடி கார்த்திக் கலந்து கொண்டார்.
அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை
இதனைத் தொடர்ந்து விசிக மாவட்ட பொறுப்பாளர் பாசறை செல்வராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி தலைமையில் மாநகராட்சியில் இருந்து 2000க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் நடைப் பயணமாக ரயில்வே சாலை வரை வந்து அங்கிருந்த அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உறுதிமொழி
இதனைத் தொடர்ந்து விசிகவின் கோரிக்கையை ஏற்று அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், இந்நாளில் அனைத்து மதத்தினரும் சமம் என்றும் இதனை தடுக்க நினைக்க அனைத்து சக்திகளையும் ஒன்றிணைந்து ஒடுக்குவோம் எனவும் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் கௌதமிதிருமாதாசன், ஊடகப்பிரிவு செயலாளர் மதி ஆதவன், ஸ்ரீபெரும்புதூர் நிர்வாகி மேனகா கோமகன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சிகள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion