மேலும் அறிய

அதிமுக கொறடா வேலுமணி சபாநாயகருக்கு கொடுத்த கடிதம்; ஒருதலை பட்சம் இல்லாமல் நடவடிக்கை என சபாநயகர் பேட்டி

”கடந்த வாரம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் எனக்கு ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். அது என்னுடைய பரிசீலனையில் உள்ளது” - அப்பாவு

நெல்லையில் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் பொழுது, அதிமுக கொறாடா வேலுமணி என்னை சந்திக்க வேண்டும் என சென்னையில் உள்ள சட்டப்பேரவை அலுவலகத்திற்கு வந்துள்ளார். என்னை சந்தித்து பேச வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் நான் நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால் நிகழ்ச்சி முடிந்த பின்னர் தொலைபேசியில் பேசுவதாக தெரிவித்துள்ளேன். அதிமுக கொறடா வேலுமணி கடிதம் ஒன்றை கொண்டு வந்துள்ளார். அதனை எனது உதவியாளரிடம் கொடுத்து சென்றுள்ளார். நான் இதுவரை அந்த கடிதத்தை படித்துப் பார்க்கவில்லை. சென்னை சென்று அக்கடிதத்தை படித்து பார்த்தால் அதில் என்ன எழுதியிருக்கிறது என தெரியும்.

அதிமுக கொறடா வேலுமணி சபாநாயகருக்கு கொடுத்த கடிதம்; ஒருதலை பட்சம் இல்லாமல் நடவடிக்கை என சபாநயகர் பேட்டி

கடந்த வாரம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் எனக்கு ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். அது என்னுடைய பரிசீலனையில் உள்ளது. அதே போல எதிர்க்கட்சி கொறாடா வேலுமணி கொடுத்த கடிதத்தை படித்து பார்த்து பரிசீலனை செய்வேன். தமிழக சட்டப்பேரவை தலைவர் என்ற முறையில் ஜனநாயக முறைப்படி சட்டப்படி, விதிப்படி நியாயமாக ஒருதலை பட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த முடிவாக இருந்தாலும் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் உட்பட்டபடி அமையும். தனிப்பட்ட முறையில் யார் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுகவினர் அனைவரும் இரட்டை இலையில் இருந்து வெற்றி பெற்று வந்தவர்கள் தான். மற்றபடி அனைத்தும் அவர்களது கட்சியின் உள் விவகாரம். அதில் தலையிட சட்ட மன்ற பேரவை தலைவருக்கோ, இந்த ஆட்சியில் இருப்பவர்களோ தலையிட போவதில்லை. துணை தலைவர் பதவி என்ன காரணத்திற்காக மாற்றப்பட்டுள்ளது என்பதை அவர்களது கடிதத்தின் மூலம் படித்து பார்த்து சட்ட விதி என்ன கூறுகிறது என்று பார்க்க வேண்டும். வழக்கறிஞர் உள்ளிட்டவர்களுடன் ஆய்வு செய்து எதிர்க்கட்சி கொறடா வேலுமணி கொடுத்த கடிதம் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க: Vegetables Price List: கம்மி விலையில் தக்காளி.. விலையேறிய பூண்டு - இன்றைய காய்கறி விலை நிலவரம்.!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கூட்டணி பேசியாச்சா? அமைச்சரவையில் பாமக?
கூட்டணி பேசியாச்சா? அமைச்சரவையில் பாமக?" மேடையிலேயே அனல் பறக்கப் பதிலடி கொடுத்த அன்புமணி!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
காவலர் நியமனம் ஒத்திவைப்பு.. பதவி உயர்வு காத்திருப்பு; விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!
காவலர் நியமனம் ஒத்திவைப்பு.. பதவி உயர்வு காத்திருப்பு; விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget