தமிழகத்தை போல் புதுவையிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வேண்டும் - அதிமுக வலியுறுத்தல்
மருத்துவப்படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டால் அனைத்து குடும்பத்தினரும் எடப்பாடி பழனிசாமியை தெய்வமாக வணங்குகிறார்கள்
புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் செய்தியார்களிடம் கூறுகையில், புதுச்சேரி கல்வித் துறை இயக்குனர் தனது பிள்ளையை அரசு பள்ளியில் சேர்த்திருப்பது வரவேற்புக்குரியது. இதனை அனைத்து அரசு ஊழியர்களும் பின்பற்றி, தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரத்தை அரசு வழங்கி வருகிறது.
Losliya Speech: ’என் Best Friend' ...தர்ஷனை புகழ்ந்த லாஸ்லியா
Samantha New Web Series: மீண்டும் பாலிவுட்டில் சமந்தா... வெளியான தகவல்
இதனை ரத்து செய்து அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் சட்டம் கொண்டுவர வேண்டும். கடந்த ஆண்டு அரசு கல்வித் துறைக்கு ரூ.676 கோடி செலவிட்டுள்ளது. அது போல் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் 500 கோடி வரை செலவு செய்துள்ளது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் 6 பேர் மட்டுமே மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தமிழகத்தை போல் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
Tharsan Speech: லாஸ்லியா இல்லன்னா.. சர்ச்சைகளை பற்றி மனம்திறந்த தர்ஷன்
தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 1018 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் பயன் அடைந்துள்ளனர். இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்று. அனைத்து குடும்பத்தினரும் எடப்பாடி பழனிசாமியை தெய்வமாக வணங்குகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்குவதைப்போல் 20-க்கும் மேற்பட்ட வழி களில் அரசுக்கு நிதி கசிவு ஏற்படுகிறது. அவைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என அன்பழகன் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்