’கஜானா காலியா ஸ்டாலின் ? பேனாவுக்கும் கார் ரேஸ்க்கும் மட்டும் காசு இருக்கா ?’ EPS அதிரடி..!
அறநிலையத்துறையின் நிதியை எடுத்து கல்லூரியை அமைத்தால் மாணவர்களுக்கு தேவையான முழுமையான நிதி கிடைக்காது என்று கூறினேன் ஆனால் கண்ணு காது வைத்து திரித்து பேசுகிறார்கள் - எடப்பாடி பழனிச்சாமி

விழுப்புரம் : அறநிலையத்துறையின் நிதியை எடுத்து கல்லூரியை அமைத்தால் மாணவர்களுக்கு தேவையான முழுமையான நிதி கிடைக்காது என்று கூறினேன் ஆனால் கண்ணு காது வைத்து திரித்து பேசுவாதகவும் சிறுபானமையின மக்களின் அரனாக அதிமுக அரசு இருந்ததாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம்
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்று பயணத்தில் இரண்டு நாள் பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த எடப்பாடி பழனிச்சாமி கரும்பு விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி கோரிக்கை மனுவை பெற்றார்.
பொது மக்களுக்கு மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
அதனை தொடர்ந்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நான்கு முனை சந்திப்பு வரை மக்களோடு மக்களாக நடந்து குறைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர் நான்கு முனை சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எழுச்சி சுற்றுபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம் மக்கள் நன்மைகளே பெறவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் கொடுக்காத திமுக அரசு
பெஞ்சல் புயலில் திட்டமிட்டு செயல்படாததால் விழுப்புரம் மக்கள் பாதிக்கப்பட்டனர் தண்ணீர் கூட கொடுக்க முடியாத திமுக ஆட்சியாக இருந்ததாகவும், பல புயல்களை கண்டது அதிமுக ஆட்சி ஆனால் ஒரு புயல் பாதிப்பினை எதிர்கொள்ள முடியாத அரசால் மக்கள் பாதித்தார்கள் என தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் இரண்டு முறை விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி செய்யபட்டது இரண்டு முறை கடன் தள்ளுபடி செய்த ஒரே அரசு அதிமுக என்றும் மும்முனை மின்சாரம் அதிமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டது.
ஆண்டவனே பொன்முடி பதவியை பறித்துவிட்டார்
விவசாயத்தை சார்ந்த மாணவர்கள் கல்வி கிடைக்க அறிவித்த அம்மா பல்கலைக்கழகம் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக ரத்து செய்த அரசாக திமுக உள்ளதாகவும் பல்கலைக்கழகத்தை ரத்து செய்த பொன்முடிக்கு ஆண்டவனே அமைச்சர் பதவியை பறிச்சிட்டதாக கூறினார். நந்தன் கால்வாய் திட்டம் 309 கோடியில் கிடப்பில் போட்டது திமுக அரசு தான்.
அறநிலையை துறையின் நிதியை எடுத்து கல்லூரியை அமைத்தால் மாணவர்களுக்கு தேவையான முழுமையான நிதி கிடைக்காது என்று கூறினேன் : திரித்து கூறிய திமுக
அறநிலையை துறையின் நிதியை எடுத்து கல்லூரியை அமைத்தால் மாணவர்களுக்கு தேவையான முழுமையான நிதி கிடைக்காது என்று கூறினேன் ஆனால் கண்ணு காது வைத்து திரித்து பேசுவாதக தெரிவித்தார். உறுப்பு கல்லூரிகளாக இருந்ததை அரசு கல்லூரியாக மாற்றியது அதிமுக ஆட்சி என்றும் அதிமுக ஆட்சியில் 21 பாலிடெக்னிக் கல்லூரி 4 சட்டக்கல்லூரி ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரி கொண்டுவந்தது அதிமுக ஆட்சியில், திமுக ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரி கூட கொண்டு வர முடியவில்லை என தெரிவித்தார். ஏழை மாணவர்களை 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவராக்கிய அரசாங்கம் அதிமுக ஆட்சியில் தான் , உயர்கல்வி வளர்ச்சி அடைந்தது அதிமுக ஆட்சியில் தான் மாணவர்களுக்கு துரோகம் செய்த திமுக அரசை வீழ்த்த வேண்டும் அறநிலைய துறையிலிருந்து கல்லூரிக்கு நிதி எடுத்து கொடுத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் முழுமையான நிதி அவர்களுக்கு கிடைக்காது என்பதால் தெரிவித்தாக கூறினார். பொய் பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின் அரசு பேனா அமைப்பதற்கும் கார் பந்தயம் நடத்துவதற்கு பணம் இருக்கும் போது கல்லூரி கட்டுமாணம் செய்வதற்கு பணம் இல்லையா என கேள்வி எழுப்பினார். மாணவர்கள் மீது அக்கறை கொண்ட கட்சியாக அதிமுக உள்ளது. தமிழகத்தில் 96 கல்லூரிகளில் முதல்வரும் ஆசிரியரும் இல்லை மோசமான திமுக ஆட்சி அகற்ற வேண்டும்.
மக்களை பற்றி சிந்திக்காத திமுக அரசு
திமுக ஸ்டாலின் ஆட்சியில் மின் கட்டண உயர்வு 52 சதவிகிதம் உயர்த்தபட்டுள்ளது. மக்களை பற்றி சிந்திக்காத அரசு விலைவாசி உயர்ந்துள்ளது விலைவாசி உயர்வை பொருட்படுத்தாமல் திமுக அரசு செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். திமுக ஆட்சி இருக்கும் வரை மக்கள் வீடு கட்ட முடியாது என்றும் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்த அரசாக அதிமுக இருந்து, சிறுபான்மையின மக்களின் அரனாக செயல்பட்டது அதிமுக அரசு என கூறினார். தேர்தலுக்கு முன் மக்களின் குறைகளை மனுக்களாக பெற்று மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறிய ஸ்டாலின் அதனை தீர்க்கவில்லை. திமுக ஆட்சியில் மக்களின் வரிப்பணத்தில் 200 கோடி ஊழல் செய்துள்ளார்கள் என்றும் ஸ்டாலின் நடத்துவது குடும்ப ஆட்சி 2026 மக்கள் ஆட்சியை அதிமுக நடத்தும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.





















