(Source: ECI/ABP News/ABP Majha)
AIADMK Meeting: ஓபிஎஸ் முன்மொழிய இபிஎஸ் வழிமொழிந்த தீர்மானங்கள் நிராகரிப்பு.. சி.வி.சண்முகம் ஆவேச பேச்சு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு தீர்மானங்களை முன்மொழிய, அதனை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிவதாக தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழுவில் திடீர் திருப்பமாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பொதுக்குழுக்கூட்டம் நடத்த அனுமதியளித்தார். இதனைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதனிடையே இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஸ்ரீவாரு மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு மஞ்சள் வேட்டி வெள்ளை சட்டையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்துள்ளார்.
Cadres offer grand welcome to Leader of Opposition Edappadi K Palaniswami at Vanagaram. #AIADMK #EPS pic.twitter.com/SoW7QsbWod
— Janardhan Koushik (@koushiktweets) June 23, 2022
ஆனால் தொண்டர்களின் கூட்டத்தில் சிக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அவர் ஒரு மணி நேரம் தாமதமாக வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு தீர்மானங்களை முன்மொழிய, அதனை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிவதாக தெரிவித்தார்.
⚡️ “அதிமுக பொதுக்குழு - பாதியில் வெளியேறிய ஓ.பி.எஸ்!” https://t.co/CpRL83QdtK #aiadmk #aiadmkgeneralmeeting #ops #eps #opanneerselvam #edappadipalanisamy #admk #ViralVideos
— ABP Nadu (@abpnadu) June 23, 2022
அதன்பின் மேடையில் பேசிய முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான சி.வி.சண்முகம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருந்த 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேறினால் மட்டுமே மற்ற தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்