மேலும் அறிய

KC veeramani IT raid: 'ஸ்டாலின் போலீஸ் பழிவாங்குகிறது...’ - கே.சி.வீரமணி ரெய்டுக்கு அதிமுக கண்டனம்!

இத்தகைய சலசலப்புகளுக்கும், பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் நிர்வாகிகளும், ரத்தத்தின் ரத்தமான கழக செயல் வீரர்களும், என்றும் அடிபணிந்ததில்லை.

ஜெயலலிதா தலைமையிலான 2011 முதல் 2016ம் ஆண்டு மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஆகியவற்றில் தமிழ்நாட்டின் அமைச்சராக பொறுப்பு வகித்தவர் கே.சி.வீரமணி. கடந்த 10 ஆண்டு காலமாக அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த கே.சி.வீரமணி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது எழுந்த புகாரை அடுத்து இன்று காலை 6.30 மணி முதல் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

KC veeramani IT raid: 'ஸ்டாலின் போலீஸ் பழிவாங்குகிறது...’ - கே.சி.வீரமணி ரெய்டுக்கு அதிமுக கண்டனம்!

இந்த ரெய்டு தொடர்பாக அதிமுக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையில், "விடியா" அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மற்றுமொரு உதாரணம் எனக் குறிப்பிட்டுள்ளது. 

அறிக்கையின் முழு விவரம், “கருத்து மோதல் நபாக்குள் ஏற்படயாம். வளர்ச்சிக்கு அறிகுறி அது. நார் மக்கள், யள விலங்குகள் அல்ல. இது நாடு, காடு அல்லட காட்டு முறையைக் கையாண்டால் அதற்குப் பெயர் ஜௗநாயகமாகாது; பாசிச முறை அது" என்றார் போறிஞர் அண்ணா அவர்கள், போறிஞர் அண்ணா அவர்களின் இந்தக் கூற்றுக்கு முற்றிலும் முரனான வகையில், ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கைகளில் 'விடியா திமு.க. அரசு" ஈடுபட்டு வருகிறது.

KC veeramani IT raid: 'ஸ்டாலின் போலீஸ் பழிவாங்குகிறது...’ - கே.சி.வீரமணி ரெய்டுக்கு அதிமுக கண்டனம்!

அண்மையில், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சாத்தியப்படாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதை நிறைவேற்ற முடியாமல் மக்களின் வெறுப்பினை சம்பாதித்திருக்கின்ற நிலையில் அதனை மூடி மறைத்து, உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும். என்பதற்காக, முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளரும், கழகத்தின் தீவிர செயல் வீரருமான திரு. கே.சி. வீரமணி அவர்களுடைய வீட்டிலும், அவரது உறவினர்கள், நண்பர்கள் என்று, நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திமுக-கூட்டணிக்கு எதிராக தேர்தல் வேலை பார்த்தவர்கள் என்று சுமார் 28 இடங்களில், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, 'ஸ்டாலின் போஸீசார்' சோதனை என்ற பெயரில் இன்று ஒரு கூட நாடகத்தை அரங்கேற்றி உள்ளளார். இது. உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகமே தவிர வேறொன்றுமில்லை.

தமிழ் நாட்டு மக்களுக்கு தேர்தல் சமயத்தில் நிறைவேற்ற முடியாத 505-க்கும் பேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கிய பின்னும், வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் ஆட்சியைப் பிடித்தது திமுக, எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக ‘நீட்` தேர்வு ரத்து பற்றி மாணாக்கர்களிடம் பொய்ச் செய்திகளைப் பரப்பிய திரு. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக-வினர் மீது பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில், தமிழக மக்களின் வெறுப்பிற்கு 'விடியா' அரசு’ ஆளாகியுள்ளது. மக்களின் எதிர்ப்பு உணர்வை. கசப்பான மன ஓட்டத்தை மாற்ற, 'விடியா அரசு' அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் கழக நிர்வாகிகள், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் தேர்தல் சமயத்தில் திமுக-வின் அராஜகத்தை எதிர்த்து நின்று ஜனநாயகக் கடமையாற்றிய செயல் வீரர்கள் என்று பலர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்தும், வருமானத்திற்கு கழவு, சொல் அதிகமாக சொத்து சேர்த்தல் என்ற பெயரில் நளது காவல் துறையினரை ஏவி பலவித இடையூறுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் தமிழ் நாடு முழுவதும் 2 கட்டமாகத் தான் நடைபெறும். பொதுவாக, உள்ளாட்சிப் ஆனால், வெறும் 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் இருந்தே திமுசு-வின் தேர்தல் தோல்வி பயம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. இந்தத் எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்; தேர்தலை. எதிர்த் அதைக் காரணமாக யைத்து உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்று ஆளும் திமுக-வினர் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக மற்றும் திரு. ஸ்டாலினின் அதிகார வர்க்கம் மற்றும் குடும்ப ஆதிக்கம் ஆகியோரின் கட்டணியை, ஜன்நாயக முறைப்படி எதிர்கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முழு முயற்சியுடன் தயாராக உள்ளோம்.

இன்று, ஏற்கெனவே அறிவித்தபடி கழக செயல்வீரர்கள் கூட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற இருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த கழக 120 நாட்களில், முன்னாள் அமைச்சர்களான, கரூர் திரு. எம்.ஆர், விஜயபாஸ்கர், கோவை திரு, எஸ்.பி. வேலுமணி ஆகியோரைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை திரு. கே.சி. வீரமணி அவர்கள் வீட்டிலும், அவரது நண்பர்கள் என்று 'விடியா அரசின்' போலீசாரே முடிவு செய்து சுமார் 28 இடங்களிலும் இன்று சோதனை என்ற பெயரில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்குத் தோல்வி ஏற்படும் என்று சந்தேகப்படும் மாவட்டங்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயல் வீரர்களின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் விதத்தில், முக்கிய நிர்வாகிகளை செயல்பட விடாமல் தடுக்கும் நோக்கத்தின் முதல்படியாக இன்று. நிரு. கே.சி. வீரமணி அவர்கள் வீட்டில் நடத்தப்படும் சோதனையை ஒரு பழிவாங்கும் படலமாகயே அரசியல் பார்வையாளர்களும், பொதுமக்களும் பார்க்கிறார்கள்.

இத்தகைய சலசலப்புகளுக்கும், பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் நிர்வாகிகளும், ரத்தத்தின் ரத்தமான கழக செயல் வீரர்களும், என்றும் அடிபணிந்ததில்லை. சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் எப்போதுமே சட்டத்தின் ஆட்சியைத்தான் தமிழகத்தில் நடத்தி வந்தனர். அவர்களைத் தொடர்ந்து அம்மாவின் வழிவந்த, அம்மாவின் அரசும் சட்டப்படிதான் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தது. எனவே, இத்தகைய ஒடுக்குமுறைகளை சட்டத்தின் துணைகொண்டு எதிர்கொள்வோம்; வெற்றி பெறுவோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு நிதிப் பற்றாக்குறை என்றும், நீட் தேர்வு ஒழிப்பு என்பது மத்திய அரசின் மூலம் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால்தான் முடியும் போன்ற சாக்கு போக்குளைக் கூறாமல், தேர்தல் சமயத்தில் அளித்த 505-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழ் நாடு சிறந்த நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு, தொழில் துறை, உணவு உற்பத்தி உள்ளிட்ட அனைத்து முக்கியமான துறைகளில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்ததையும், கொரோனா நோய்த் தொற்று தடுப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்ததையும் மனதில் நிலைநிறுத்தி, அதுபோல் தமிழ் நாட்டைத் தொடர்ந்து முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'விடியா' திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

அரசியல் கட்சிகளை மிரட்டி, அதன்மூலம் மக்களைப் பணிய வைத்து, தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்க வைத்துவிடலாம் என்று மனப்பால் குடிக்காமல், "மக்களைப் பார்த்து ஆளுகிறவர்கள் அஞ்ச வேண்டும். ஆளுவோரைப் பார்த்து மக்கள் அஞ்சக்கூடாது, அதுதான் உண்மையான ஜனநாயகம்" என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப ஜனநாயக முறையில் தேர்தலைச் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'விடியா' திமுக அரசை கேட்டுக்கொள்கிறோம்’ என கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget