மேலும் அறிய

‛போலீஸ் அலட்சியத்தால் அடுத்தடுத்து உயிரிழப்பு’ -விசாரணை மரணத்திற்கு ஓபிஎஸ் கண்டனம்!

காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் நலமாக இருந்தார் என்றால், துன்புறுத்தப்படவில்லை என்றால், அவருடைய பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்துச் செல்லுமாறு கூறியது ஏன்?

ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீஸ் தாக்கியதால் உயிரிழந்ததாக எழுந்த புகார் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதோ அவரது அறிக்கை அப்படியே...

தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளதோடு மட்டுமல்லாமல், மக்களிடையே ஒருவித அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், இராமநாதபுரத்தில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் திரு. மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‛போலீஸ் அலட்சியத்தால் அடுத்தடுத்து உயிரிழப்பு’ -விசாரணை மரணத்திற்கு ஓபிஎஸ் கண்டனம்!

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையத்திற்குட்பட்ட காவல் துறையினர் 04-12-2021 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டதாகவும், அப்போது அவ்வழியே நீர்க்கோழினேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் சஞ்சய் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்ததாகவும், அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியபோது, அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாகவும், இதனால் ஆத்திரமடைந்த காவல் துறையினர் அவர்களை பின் தொடர்ந்து சென்று விரட்டிப் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், மாலையில் மணிகண்டனின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட காவல் துறையினர் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கோரியதாகவும், பின்னர் வீட்டிற்குச் சென்ற மணிகண்டன் இரவில் தூங்கிய நிலையில் காலையில் மர்மமான முறையில் இறந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.

இது குறித்து மணிகண்டனின் உறவினர்கள் தெரிவிக்கையில், காவல் நிலையத்திலிருந்து வரும்போதே மணிகண்டனால் நடக்கக்கூட முடியவில்லை என்றும், வீட்டிற்கு வந்த பிறகு மூன்று முறை வாந்தி எடுத்தார் என்றும், மணிகண்டனின் பிறப்புறுப்பில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், இதற்குக் காரணம் காவல் துறையினர்தான் என்றும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும், இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இதனை மறுக்கும் காவல் துறையினர் பாம்பு கடித்து மணிகண்டன் இறந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மணிகண்டனின் உறவினர்கள் பரமக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்ட நிலையில், உயர் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்யப்படும் என உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் நல்ல நிலையில் தான் இருந்தார் என்றால், காவல் துறையினரால் துன்புறுத்தப்படவில்லை என்றால், அவருடைய பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்துச் செல்லுமாறு கூறியது ஏன்? உறவினர்கள் கூறுவது போல், மணிகண்டன் நடந்துகூட செல்ல முடியாத அளவுக்கு காவல் நிலையத்தில் என்ன நடந்தது? மணிகண்டனின் நண்பரை அழைத்து காவல் துறை விசாரணை நடத்தியதா? இறப்பிற்கு காரணம் என்ன? போன்ற சந்தேகங்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. திரு. மணிகண்டன் மரணம் குறித்து தீர விசாரணை நடத்தப்பட்டு, உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசாங்கத்திற்கு உண்டு.

இதேபோன்று, விழுப்புரம் மாவட்டம், சு. பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் என்கிற விவசாயி அவரது மனைவியுடன் சேர்ந்து நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சுண்டல், போண்டா ஆகியவற்றை விற்பனை செய்தபோது, அரகண்டநல்லூர் காவல் துறையினர் அதைத் தடுத்ததாகவும், இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வில் உலகநாதன் கீழே விழுந்து உயிரிழந்தார் என்றும், இதுகுறித்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

‛போலீஸ் அலட்சியத்தால் அடுத்தடுத்து உயிரிழப்பு’ -விசாரணை மரணத்திற்கு ஓபிஎஸ் கண்டனம்!

இந்த இரு நிகழ்வுகளுக்கும் காவல் துறையினரின் மெத்தனப் போக்கே காரணம் என்பது செய்திகளைப் படிக்கும்போதே கண்கூடாகத் தெரிகிறது. காவல் துறையினர் திறமையாக கையாண்டு இருந்தால் இந்த இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது.

காவல் துறையினரின் மெத்தனப் போக்கிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, திரு. மணிகண்டன் மற்றும் திரு. உலகநாதன் ஆகியோரின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்படவும், இதுபோன்ற உயிரிழப்புகள் இனி வருங்காலங்களில் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ளவும், உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு அரசு உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கவும் ஆவன செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "அதானியைச் சந்தித்தேனா?" சட்டசபையில் போட்டு உடைத்த மு.க.ஸ்டாலின்!
UGC NET 2024: இன்றே கடைசி: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி!
UGC NET 2024: இன்றே கடைசி: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி!
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
"குறையே சொல்ல மாட்டேன்" EPS கொண்டு வந்த திட்டத்தை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் - எந்த திட்டம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin slams Intelligence IG: ''கோட்டை விட்ட உளவுத்துறை! கடுப்பான முதல்வர் ஸ்டாலின்!High Court Judge Controversy Speech: ”இது இந்துஸ்தான்!இந்துக்கள் தான் ஆளனும்” நீதிபதி சர்ச்சை கருத்துAadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "அதானியைச் சந்தித்தேனா?" சட்டசபையில் போட்டு உடைத்த மு.க.ஸ்டாலின்!
UGC NET 2024: இன்றே கடைசி: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி!
UGC NET 2024: இன்றே கடைசி: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி!
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
"குறையே சொல்ல மாட்டேன்" EPS கொண்டு வந்த திட்டத்தை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் - எந்த திட்டம்?
Teachers Protest: படையெடுத்த பகுதிநேர ஆசிரியர்கள்; சென்னையில் தொடங்கிய போராட்டம்- கைது செய்யும் காவல்துறை!
Teachers Protest: படையெடுத்த பகுதிநேர ஆசிரியர்கள்; சென்னையில் தொடங்கிய போராட்டம்- கைது செய்யும் காவல்துறை!
RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?
RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
New RBI Governor: இனிமே இவர் தான்.. வட்டி குறையுமா? இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர், யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
New RBI Governor: இனிமே இவர் தான்.. வட்டி குறையுமா? இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர், யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
Embed widget