புதுச்சேரியில் பரபரப்பு! அன்பழகன் vs நாராயணசாமி: யார் பொய் சொல்கிறார்கள்? உண்மை என்ன?
மனசாட்சியே இல்லாமல் வாய்க்கு வந்தபடி பொய் பேசுவதை நிறுத்திவிட்டு இருக்கும் கொஞ்சம் காலத்தில் மனசாட்சிபடி உண்மையைப் பேசுவது நாராயணசாமி போன்றவர்களுக்கு அழகல்ல.

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் தவறான பொய் குற்றச்சாட்டுகளுக்கு அரசின் சார்பில் பதில் அளிக்காததால் தொடர்ந்து பொய் பேசுவதையே வழக்கமாக நாராயணசாமி கொண்டிருப்பதாக புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் தவறான பொய் குற்றச்சாட்டுகளுக்கு அரசின் சார்பில் பதில் அளிக்காததால் தொடர்ந்து பொய் பேசுவதையே வழக்கமாக நாராயணசாமி கொண்டிருப்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
அரசுத் துறையில் இதுவரை பணிக்கு 1500 நபர்களுக்கு மேல் வைக்கவில்லை என்றும் அதை தான் நிரூபித்தால் முதலமைச்சர் பதவி விலக தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஐந்தாண்டு காலம் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு அரசு நிர்வாகமே என்ன என்று தெரியாமல் வாய்க்கு வந்ததை உளருகிரார்.
அரசு பணியிடங்களுக்கு தேர்வின் மூலம் இதுவரை பொதுப்பணித்துறையில் 178 நபர்களும்,மின் துறையில் 73 நபர்களும், சர்வே துறையில் 67 நபர்களும். அமைச்சகப்பணியில் சுமார் 750 நம்பர்களும், காவல்துறையில் 668 நபர்களும் ,ஊர்க்காவல் பணிக்கு சுமார் 500 நபர்களும். புள்ளி விபரத்துறையில் 38 நபர்களும், போக்குவரத்து துறையில் 39 நபர்களும், தீயணைப்பு துறையில் 75 நபர்கள் என தேர்வின் மூலம் மட்டும் சுமார் 2500 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அரசுப் பணிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோன்று தேர்வில்லாமல் கல்வித்துறை, சுகாதாரத்துறை செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த இந்த நான்கு ஆண்டு காலத்தில் அரசு பணியில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு சவாலாகவே விடுகிறேன். அவர் சொல்வது போன்று 1500 நபர்களுக்கு மேல் அரசு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தால் நாராயணசாமி அரசியலில் விட்டு விலக தயாரா?.
கடந்த கால திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தனது தனிப்பட்ட ஈகோ பிரச்சனையால் மத்திய அரசிடமும், துணைநிலை ஆளுநர் இடமும் மோதல் போக்கு கடைப்பிடித்து மாநிலத்தின் 10 லட்சம் மக்களின் வாழ்க்கையை வீணடித்தவர் நாராயணசாமி ஆவார். தனது கட்சியின் தலைமையை தனது கூட்டணி கட்சியான திமுகவையும் திருப்தி படுத்துவதற்காக புதுச்சேரி மாநிலத்தின் நலனை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்தவர் நாராயணசாமி.
இவருக்கு புதுச்சேரியில் நடைபெறும் நல்லாட்சியை பற்றி குறை கூற என்ன தகுதி இருக்கிறது. முதியோர் மற்றும் விதவை உதவி பெறும் திட்டம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மக்கள் நலம் சார்ந்த எந்த ஒரு உதவி திட்டத்திலும் புதிதாக ஒரு நபரை கூட கூடுதலாக சேர்க்காமல் உதவி பெறும் திட்டத்திலும் 100 ரூபாய் கூட உயர்த்தி வழங்காமல் 5 ஆண்டு காலத்தை வீணடித்துச் சென்றவர் நாராயணசாமி ஆவார்.
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் புதிதாக முதியோர் விதவை உதவி பெறும் திட்டத்தில் மட்டும் 38 ஆயிரம் நபர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டு மாதத்தில் கூடுதலாக 10 ஆயிரம் நபர்கள் இத்திட்டத்தில் பயன்பெறவுள்ளனர். அதேபோன்று நிதி உதவி பெறும் திட்டத்தில் தலா 500 லிருந்து 1000 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அரசின் நிதி உதவி பெறாத குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் சுமார் 78,000 பெண்கள் பயன் பெற்று வருகின்றனர்.
இவற்றையெல்லாம் தனது சாதுரியமான பொய்யால் மூடி மறைத்து வழக்கம் போல மனசாட்சி இல்லாமல் நாராயணசாமி பொய் பேசுகிறார். கடந்த கால திமுக, காங்கிரஸ் ஆட்சியில் முதலமைச்சராக இருந்தவர் தான் என்பதையும் மறந்து விட்டு வீதியில் வடை சுட்டு ஆட்சியை கேவலப்படுத்தியவர் நாராயணசாமி. தற்போது மின்துறை சம்பந்தமாக திடீரென பந்த் போராட்டம் நடத்துவேன் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். உண்மையில் அவரது இந்த அறிவிப்பு புதுச்சேரி காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறதா? அவரது இந்த அறிவிப்பை காங்கிரஸ் உடன் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொள்கிறதா என தெரியவில்லை.
எதையாவது மனசாட்சியே இல்லாமல் வாய்க்கு வந்தபடி பொய் பேசுவதை நிறுத்திவிட்டு இருக்கும் கொஞ்சம் காலத்தில் மனசாட்சிபடி உண்மையைப் பேசுவது நாராயணசாமி போன்றவர்களுக்கு அழகல்ல. தனது ஐந்தாண்டு கால திமுக.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியையும் தற்போதைய தேசிய ஜனநாயக ஆட்சியையும் திரு நாராயணசாமி அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வது நல்லது. இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.





















