Vijayakant Latest pic: மனைவி, மகன்களுடன் விஜயகாந்த் - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். உடல்நலக்குறைவின் காரணமாக, விஜயகாந்தால் அரசியலில் பெரிதளவில் பங்களிக்க முடியவில்லை
நடிகர் விஜயகாந்தின் புதிய புகைப்படம் ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை அடுத்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களுடன் கூடிய கேப்ஷனை பதிவிட்டிருந்தார் விஜயகாந்த். இதன் மூலம், வைரலான அந்த புகைப்படம் உண்மைதான் என்பது உறுதியானது.
இந்நிலையில், மனைவி, மகன்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்திருக்கிறார் விஜயகாந்த். அதில், ”இன்று எனது மனைவி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை, எனது மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகப்பாண்டியனுடன், தெரிவித்த போது...” என பதிவிட்டிருக்கிறார். இதனால், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்று எனது மனைவி
— Vijayakant (@iVijayakant) March 18, 2022
திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்களை, எனது மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகப்பாண்டியனுடன், தெரிவித்த போது...#PremalathaVijayakant | @vj_1312 | #Shanmugapandian pic.twitter.com/yfX1cU0w6x
ட்விட்டரில் அவர் பகிர்ந்த பழைய புகைப்படம்:
குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய போது...!
— Vijayakant (@iVijayakant) November 15, 2020
Diwali Celebration with family .#Diwali2020 pic.twitter.com/Rk9sgrkQjw
2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த விஜயகாந்த், கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். உடல்நலக்குறைவின் காரணமாக, விஜயகாந்தால் அரசியலில் பெரிதளவில் பங்களிக்க முடியவில்லை. பல்வேறு கட்ட சிகிச்சைகளை மேற்கொண்ட பின்னரும் விஜயகாந்தால் மீண்டும் பழைய உடல்நிலையை மீட்டெடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் அவரது சமீபத்திய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் படிக்க:
#JUSTIN | அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது
— ABP Nadu (@abpnadu) March 18, 2022
விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்குகிறார், அனிருத் இசை அமைக்கிறார்
இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும், அடுத்தாண்டு படம் வெளியாகும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தகவல்#AK62 #AjithKumar #Ajith pic.twitter.com/0SbRQhnxRX
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்