Aadhav Arjuna Speech: திமுகவுக்கு ஆதரவு... ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேச்சு! ஷாக்காகி பார்த்த விஜய்
நமது தலைவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே எங்கள் தலைவர், உங்களுக்கு நன்றிக்கடன் இல்லையா என்று பேசியிருந்தார்.

2021 தேர்தலில் எங்கள் தலைவர் விஜய் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவுக்கு ஆதரவு என்று தவெக தேர்தல் மேலாண்மை பொது செயலாளர் பேசியது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
தவெக பொதுக்குழு:
தமிழக வெற்றி கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தது. இதில் தவெகவின் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆதவ் ஆர்ஜூனா பேச்சு:
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூருக்கு விஜய் ஏன் போகவில்லை என்கிற விமர்சனம் உள்ளது. அதற்கு நான் பதில் சொல்கிறேன், கரூர் காவல்துறை வினோதமான காவல்துறை. 8 நாட்களுக்கு முன்பு, அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு கொடுத்தோம். காவல்துறையை நாங்கள் நம்பியது தான் ஒரே தவறு. காவல்துறையை நம்பி தவறு செய்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம்.
டிஎஸ்பியை சாடிய ஆதவ்:
கரூரில் சிறப்பு வாய்ந்த டிஎஸ்பி., செல்வராஜ் உள்ளார். அவர் செந்தில் பாலாஜி தும்பினால், கட்சிப் படித்து செல்வார் அப்படிப்பட்ட ஒருவரை தான் டிஎஸ்பியாக போட்டு வைத்திருக்கிறார்கள். இருக்கட்டும் உங்கள் அப்பன் சி.பி.ஐ., வந்திருக்கிறார். சி.பி.ஐ., இந்த விவாகரத்தில் முதலமைச்சர் உட்பட அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்றார்.
காவல்துறை பத்திரமாக இந்த தெருவில் வாருங்கள் காவல்துறை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர். விஜய் வருவது தொடர்ந்து நேரலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களுடைய பாதுகாப்பு குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறோம். திடீரென திருச்செந்தூர் கோவிலில் இருவது லட்சம் பேர் கூடினால் எப்படி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமோ. அதேபோன்று பாதுகாப்பு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
மக்களின் உயிரை வைத்து விளையாடாதீர்கள்
பத்து அல்லது இருவது சதவீத நிர்வாகிகள் மட்டும்தான் கூட்டத்தில் இருக்கிறார்கள் . உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பை கொடுக்க வேண்டும். என்னை கைது செய்யுங்கள், யாரை வேண்டுமென்றாலும் கைது செய்யுங்கள் ஆனால் மக்களின் உயிரை வைத்து விளையாடாதீர்கள். இதுதான் கேவலமான எண்ணம், மக்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதை வைத்து கட்சி இவர்கள் மீது பழி போடலாம் என செய்கிறார்கள்.
திமுகவுக்கு ஆதரவு :
தொடர்ந்து பேசிய அவர்”உங்களிடம் பாவ மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன், எதிர்க்கட்சியாக இருந்த திமுகவுக்கு 10 ஆண்டுகள் வேலை பார்த்தற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், நமது தலைவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே எங்கள் தலைவர், உங்களுக்கு நன்றிக்கடன் இல்லையா என்று பேசியிருந்தார்.
"பாவ மன்னிப்பு கேட்கிறேன்" ஆதவ் அர்ஜூனா அதிரடி#Aadhavarjuna #tvk #vijay #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு pic.twitter.com/QucMKaCfaU
— ABP Nadu (@abpnadu) November 5, 2025
தற்போது அவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனால் 2021 தேர்தலின் போது விஜய் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தை ஆதவ் உறுதிப்படுத்தியதாக இணையவாசிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.






















