மேலும் அறிய

OBC Reservation: இடஒதுக்கீடு: அதிமுகவின் மற்றொரு மைல்கல் - இபிஎஸ், ஓபிஎஸ்!

மத்திய அரசு, மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டினை உறுதியாக நின்று அமல்படுத்திய பிரதமருக்கு நன்றி.

27 சதவீத ஓபிசி இடஒதுக்கீடு அதிமுகவின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மற்றொரு மைல்கல் என்று ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2021-22 ஆம் கல்வி ஆண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27 சதவீத OBC ஒதுக்கீடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைவிடாத சட்டப் போராட்டத்திற்குக் கிடைத்த மற்றொரு சாதனை மைல்கல்.

1980-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி, தமிழகத்தில் சமூக நீதிக்கான முதல் வெற்றியை நிலை நாட்டினார்கள். உச்சநீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டபோது, 1982-ல் அம்பாசங்கர் தலைமையில் இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அமைத்து எம்ஜிஆர், தான் கொண்டுவந்த இட ஒதுக்கீட்டினை உறுதி செய்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களிலும், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி, மத்திய அரசால் 13.08.1990 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதே சமயத்தில், கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு குறித்து எந்தவித ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை. இதனை அறிந்த ஜெயலலிதா, சமுதாய நிலையிலும், கல்வித் துறையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்கு உதவுகின்ற வகையில், மண்டல் குழுவின் பரிந்துரைகளை விரைந்து முழுமையாக நிறைவேற்றி செயல்படுத்திட மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும், மேலும் மண்டல் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதில் 27 விழுக்காடு என்பதற்குப் பதிலாக 50 விழுக்காடு என்று இட ஒதுக்கீடு செய்வதை கொள்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும்; மத்திய அரசுத் துறைகள், மத்திய அரசுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் வேலைவாய்ப்புகளில் மட்டுமின்றி, அனைத்துக் கல்வி நிலையங்களின் அனுமதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி 30.09.1991 அன்று தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தவர் ஜெயலலிதா.

OBC Reservation: இடஒதுக்கீடு: அதிமுகவின் மற்றொரு மைல்கல்  - இபிஎஸ், ஓபிஎஸ்!

தொடர்ந்து, 1993-ல் ஜெயலலிதா, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சதவீத 69 இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் 1993-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள் (கல்வி நிலையங்களில் இடங்களையும், அரசின்கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளையும் ஒதுக்கீடு செய்தல்) சட்ட முன்வடிவினை நிறைவேற்றி, இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் சேர்த்து, இட ஒதுக்கீட்டிற்கு சட்ட ரீதியிலான பாதுகாப்பை உறுதி செய்தார்கள். இதனால், தமிழ் நாட்டில் இன்றும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இதனைத் தொடர்ந்து, பழனிசாமி முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் அரசு, மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பில் உள்ள இதர மத்திய கல்வி நிறுவனங்களில், OBC சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும்படி, மத்திய அரசுக்கு 14.3.2018 அன்று கடிதம் எழுதியது. தொடர்ந்து 13.1.2020 வரை பல நினைவூட்டுக் கடிதங்கள் எழுதப்பட்டன. மேலும், பிரதமர் மோடியை நேரில் சந்திக்கும் போதும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய தொகுப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, அப்போதைய ஜெயலலிதா அரசின் சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகம் முதன் முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் பெட்டிசன் ஒன்றினை தாக்கல் செய்தார் (WP No. 8324/2020), தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களை அவ்வழக்குடன் இணைத்துக் கொண்டன.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 27.7.2020 அன்று அளித்த 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு, மாநில அரசு மற்றும் இந்திய மருத்துவக் குழுமம் (MCI) அடங்கிய குழு ஒன்றை அமைத்து, 2021-2022 முதல் OBC இட ஒதுக்கீட்டினை செயல்படுத்துவது பற்றி ஆராயும்படி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, 2020-21 கல்வி ஆண்டு முதலே 27 சதவீத OBC இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ் நாடு அரசு - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் மற்றும் இதர கட்சிகளின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் SLP file செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு 2020-ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாலும், ஏற்கெனவே 2020-21-க்கான மருத்துவச் சேர்க்கைக்கு அதிக கால தாமதம் ஆகிவிட்டதாலும், 2020-2021ஆம் ஆண்டு மருத்துவக் கல்வி சேர்க்கையில் 27 சதவீத இடஒதுக்கீட்டினை செயல்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியது. மேலும், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, வரும் 2021-2022 கல்வி ஆண்டு முதல் OBC-க்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டினை செயல்படுத்தக் குழு அமைக்கப்படும் என்று கூறியது. இதனை அடுத்து, உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

சமூக நீதியை நிலைநாட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை ஜெயலலிதாவின் நல்லாசியோடு செயல்பட்டு வந்த கழக அரசு பெற்றது. இதன்படி 27 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற மத்திய அரசு குழு ஒன்று அமைத்தது. இக்குழுவில் தமிழ் நாடு அரசின் உறுப்பினராக டாக்டர் பி. உமாநாத் 13.8.2020 அன்று நியமிக்கப்பட்டார்.

இக்குழுவின் அறிக்கையின்படி நேற்று (29.7.2021), மருத்துவக் கல்வியில், அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டினை இந்த ஆண்டு முதலே (2021-22) அமல்படுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ளதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறோம்.

மத்திய அரசு, மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டினை உறுதியாக நின்று அமல்படுத்திய பிரதமருக்கு தமிழ் நாட்டு மக்களின் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் நன்றியினை
தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டப் போராட்டத்தால், அனைத்து மாநில இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீடு உரிமையும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 50 விழுக்காடு என்ற இலக்கினை அடைவதற்கான முயற்சிகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வெற்றி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் கழகத்தினால் தொடர்ந்து பின்பற்றி வரும் சமூக நீதிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்பதை இத்தருணத்தில் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Breaking News LIVE: ராகுல் காந்தியை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுப்பதாக சபாநாயகரிடம் காங்கிரஸ் புகார்
Breaking News LIVE: ராகுல் காந்தியை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுப்பதாக சபாநாயகரிடம் காங்கிரஸ் புகார்
Embed widget