’விஜய் பேசிய இடத்தில் கூட்டத்தை போட்ட திமுக’ ஒரே நாளில் திரண்ட 25 ஆயிரம் பேர் - திருவாரூர்ன்னா சும்மாவா?
'விஜய் பிரச்சாரம் செய்த திருவாரூர் தெற்கு வீதியில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேரை கூட்டி அடுத்த நாளே கூட்டத்தை போட்டு மாஸ் காட்டியிருக்கிறது திமுக’

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருவாரூரில் சனிக்கிழமை பிரச்சாரம் செய்த நிலையில், அவர் பிரச்சாரம் செய்த அதே திருவாரூர் தெற்கு வீதியில் அடுத்த நாளான ஞாயிற்றுக் கிழமை மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் ஒரு பொதுக்கூட்டத்தை உடனடியாக ஏற்பாடு செய்தார். அவர் ஏற்பாடு செய்த அந்த பொதுக்கூட்டத்திற்கு ஒரே நாளில் 25 ஆயிரம் பேர் திரண்டனர்.
விஜய்க்கு திமுக என்பது யார் ? என காட்டிய திருவாரூர் கூட்டம்
நாகை, திருவாரூர் என்று இரு மாவட்டங்களில் சனிக்கிழமை பிரச்சாரம் செய்தார் விஜய். அவர் பரப்புரையின்போது திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்ததோடு, தனக்கு கூடிய கூட்டத்தை பார்த்து பலருக்கு அச்சம் வந்துள்ளதாக பேசினார். அவர் பேசிய இடம் திருவாரூர் என்பதால், திருவாரூர் திமுகவின் பலம் என்ன என்பதை ஒரே நாளில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் அக்கட்சி மாவட்டச் செயலாலர், விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் ஒரே நாளில் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் திரண்டு ஆரவாரம் செய்தனர். அப்போது பலரும் இதுதான் திமுகவின் பலமே என்றும் இப்படி ஒரு கூட்டத்தை ஒரே நாளில் விஜயால் கூட்ட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஓரணியில் தமிழ்நாடு உறுதியேற்பு கூட்டம்
திமுகவின் முக்கியமான முன்னெடுப்பான ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் அடுத்தக் கட்டமான தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டேன் என்ற உறுதியேற்பு கூட்டங்கள் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகின்றனர். திருவாரூரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். (திருவாரூரில் திமுக கூட்டிய கூட்டம்)
விஜயை சீண்டிய கே.என்.நேரு
இந்த கூட்டத்தில் பேசிய திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, ’நான் பூண்டி கலைவாணனை அழைத்து சொன்னேன், முதல்நாள்தான் அவரு (விஜய்) இங்கே வந்து பேசிவிட்டு போகிறார். அதே இடத்தில் கூட்டம் போடுகிறேன் என்கிறாயே? என்றேன். அதற்கு கலைவாணன் சொன்னா. ‘அதெல்லாம் ஒரு கூட்டமா? வா அண்ணே, அந்த கூட்டத்தை அடிச்சு காட்டுகிறேன்’ என்றார். அதே மாதிரி ஆயிரக்கணக்கான திமுகவினரை திரட்டி, நேற்று வந்த கூட்டம் ஒரு கூட்டமே இல்லை என்பதை அடித்துக் காட்டியிருக்கிறார் பூண்டி கலைவாணன் என்றார். அதோடு, அவர் (விஜய்) சொல்கிறார். தேர்தலில் அவருக்கும் திமுகவிற்கும்தான் போட்டி என்று, ‘தம்பி, திமுகவோடு போட்டிப் போட உனக்கெல்லாம் தகுதியே இல்லை’ என்று கே.என்.நேரு பேசியதும் கூடியிருந்த திமுகவினர் அனைவரும் உற்சாகமாக ஆர்ப்பரித்தனர்.





















