மேலும் அறிய

மத்திய அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம்..முதல்வர் விஜய் ஆதரவு தெரிவிக்காதற்கு இதுதான் காரணமா!

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழக முதல்வர் விஜய் ஏன் வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவிக்கவில்லை ?

டெல்லியின் ஜந்தர் மந்தரில் நீட்  வினாத்தாள் கசிவு விவகாரத்தை மையமாகக் கொண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், "தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏன் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?" என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, விஜயின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையிலும் இந்த விவாதம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் வட இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள அரசியல் சூழலை தனித்தனியாகப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி தலைமையில் நீட் வினாத்தாள் கசிவை எதிர்த்து டேல்லியில் பலாயிரக் கணக்கான மாணவர்கள் கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மீண்டும் புதிய அமைச்சர் தலைமையில் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என போராடும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் சென்ற போது அவர்கள் மீது காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர் . இதனால் நாடு முழுவதும் பரப்பான சூழல் நிலவி வருகிறது. இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்கள் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்

தமிழக முதல்வர் கண்டனம் 

டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து தமிழக அரசு கண்டம் தெரிவித்தது. "தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! என தமிழ்நாடு அரசு சார்பாக கூறப்பட்டது. ஆனால் டெல்லியில் மாணவர்களின் போராட்டத்திற்கு முதல்வர் விஜய் நேரடியாக தனது ஆதரவைத் தெரிவிக்காதது அரசியல் ஆர்வலர்களிடையே பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. 

டெல்லி மாணவர்களின் கோரிக்கை 

தற்போது டெல்லியில் நடைபெறும் போராட்டத்தின் மையக் கோரிக்கை, நீட் தேர்வை ரத்து செய்வது அல்ல. மாறாக, வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், அதற்கு தொடர்புடைய மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமா வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில், நீட் தேர்வு முறை தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

நீட் தேர்வு குறித்து தமிழ்நாட்டின் நிலைப்பாடு

ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடு முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. 2017-ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாநில உரிமை, சமூகநீதி மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன என்ற காரணங்களை முன்வைத்து, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழகத்தின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது.

தமிழக வெற்றிக் கழகமும், அதன் தலைவர் விஜயும் , தமிழக அரசும் நீட் தேர்வை மாநிலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகிறது. எனவே, தற்போது டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கும், தமிழ்நாட்டின் நீட் எதிர்ப்பு அரசியலுக்கும் அடிப்படையிலேயே வேறுபாடு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget