மேலும் அறிய

TN 10th Result 2026: பத்தாம் வகுப்பு ரிசல்ட்: மயிலாடுதுறைக்கு விழுந்த பலத்த அடி! 23-வது இடத்திலிருந்து 33-க்கு சரிந்தது ஏன்?

Tamil Nadu 10th Result 2026: 10-ம் வகுப்பு தேர்வில் 90.53% தேர்ச்சி பெற்று மயிலாடுதுறை மாவட்டம் மாநில அளவில் 33-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது கல்வியாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விடக் குறைந்து பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தாண்டு மாவட்டத்தில் 90.53 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி புள்ளிவிவரங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 167 அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். மாணவர்கள் 5,936 பேர், மாணவிகள் 6,049 பேர் என மொத்தம் 11,985 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர்.  இதில் 10,850 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், மாணவர்கள் 5,187 பேரும், மாணவிகள் 5,663 பேரும் அடங்குவர்.

தேர்ச்சி சதவீதம்

மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 90.53% ஆகும். வழக்கம் போலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாணவர்கள் தேர்ச்சி: 87.38 சதவீதம்

 மாணவிகள் தேர்ச்சி: 93.62 சதவீதம்

மாணவர்களை விட மாணவிகள் சுமார் 6.24 சதவீதம் கூடுதலாகத் தேர்ச்சி பெற்று, தங்களின் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டனர்.

கடந்த ஆண்டை விட பின்னடைவு

இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் கல்வித் துறைக்குச் சற்று ஏமாற்றமான முடிவுகளே கிடைத்துள்ளன. கடந்த 2025-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேர்ச்சி விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. 2025-ம் ஆண்டு தேர்ச்சி சதவீதம் 93.90 இருந்த நிலையில் இந்தாண்டு 2026-ம் ஆண்டு தேர்ச்சி சதவீதம் 90.53 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.37 சதவீதம் தேர்ச்சி குறைவாகும்.

மாநில தரவரிசையில் சறுக்கல்

தேர்ச்சி சதவீதத்தில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி, மாநில அளவிலான தரவரிசையிலும் எதிரொலித்துள்ளது. கடந்த ஆண்டு மாநில அளவில் 23-வது இடத்தில் இருந்த மயிலாடுதுறை மாவட்டம், இந்த ஆண்டு 10 இடங்கள் பின்தங்கி 33-வது இடத்தைப் பிடித்துள்ளது. அண்டை மாவட்டங்களான தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மயிலாடுதுறை பின் தங்கியிருப்பது கல்வி ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அளவிலான விபரம் 

மாநில அளவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 93.80% ஆக இருந்த நிலையில் இந்தாண்டு 0.51% உயர்ந்துள்ளது.  மொத்தம் 8,70,643 மாணாக்கர்கள் தேர்வெழுதிய நிலையில் அதில் 8,21,105 லட்சம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

96.47% மாணவிகள் தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.47% (4,19,891) மாணவிகளும், 92.15% (4,01,214) மாணவர்களும் தேர்ச்சி பெற்ற நிலையில் மாணவர்களைவிட 4.32% மாணவியர் அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர். 

முதல் 5 இடங்களை பெற்ற மாவட்டங்கள் 

மாநில அளவில் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாவட்டங்கள்:

1.புதுக்கோட்டை - 97.57%

2.சிவகங்கை - 97.54%

3.தஞ்சை - 97.41%

4.திருச்சி - 97.31%

5.கன்னியாகுமரி - 97.30%

வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு

தேர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், கடினமான சூழலிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர். தோல்வியுற்ற மாணவர்கள் மனச்சோர்வடையாமல், அடுத்து வரும் உடனடித் தேர்வுகளில் (Supplementary Exams) பங்கேற்று வெற்றி பெற உரிய ஆலோசனைகளை வழங்கவும் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில் இந்தத் தேர்வு முடிவுகள் மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. குறிப்பாகப் பின்தங்கிய நிலையில் உள்ள பள்ளிகளுக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
மக்கள் தொகை கணக்கெடுப்பு: மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
மக்கள் தொகை கணக்கெடுப்பு: மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
Embed widget