மேலும் அறிய

மின் கட்டணப் பிரச்சனையா? புது கனெக்ஷன் வேண்டுமா? மயிலாடுதுறை மக்களே இன்று இங்க போனா உடனே தீர்வு!

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் இன்று ஜூலை 08 -ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் இன்று ஜூலை 8 -ம் தேதி நடைபெற்ற உள்ள மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் கலந்துக்கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மயிலாடுதுறை மின் வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு செயற்பொறியாளர் பொறிஞர் S.சாஹுல் ஹமீது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாதாந்திர கூட்ட அறிவிப்பு

தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த நிலையில் அதன் காரணமாக மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து மயிலாடுதுறை கோட்ட மின் நுகர்வோர்களுக்கு வசதியாக, இனிவரும் காலங்களில் நிலையான ஒரு நடைமுறையை மின் வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை அன்று மயிலாடுதுறை கோட்ட அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இந்தக் குறை தீர்க்கும் கூட்டம் முறையாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மாதந்தோறும் உரிய அதிகாரியைச் சந்தித்துத் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கை 

தமிழ்நாடு அரசு மின்சார வாரிய துறையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. மக்கள் எளிதில் அரசு திட்டங்களை அடைய வேண்டும் மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் மட்டும் பணிகளை அதிகாரிகள் எவ்வித இடையரும் இன்றி மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒன்றாக மின்சார வாரியத் துறையில் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் பிரச்சனைகளையும் எளிதில் தீர்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டுகிறது. மேலும் அந்தக் கூட்டத்தின் மூலம் மின் துறையில் ஏற்படும் இடையூறுகளை களைய வழிவகை செய்து தருகிறது.

ஜூலை 8 இன்று குறைதீர் கூட்டம் 

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் இன்றைய தினம் 08.07.2026 புதன்கிழமை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் நாகை மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மயிலாடுதுறை கோட்ட மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

மனுவாக குறைகள் 

இக்கூட்டத்தில் பொதுமக்களாகிய மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்து மின்வாரியம் தொடர்பான குறைகளை சரி செய்துகொள்ளுமாறு மயிலாடுதுறை தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகம், இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற் பொறியாளர் S.சாஹுல் ஹமீது தெரிவித்துள்ளார். இந்த கூட்டமானது ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன் கிழமைகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் கவனத்திற்கு

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் அனைவரும் நேரில் கலந்துகொள்ளலாம்.

* புதிய மின் இணைப்பு கோருதல்.

* மின் அழுத்தக் குறைபாடுகள் குறித்த புகார்கள்.

* பழுதடைந்த மின் கம்பங்கள் அல்லது மின் மாற்றிகளை (Transformer) மாற்றுதல்.

* மின் கட்டணத்தில் உள்ள குளறுபடிகள்.

* பெயர் மாற்றம் மற்றும் இதர மின் வாரியம் சார்ந்த குறைகளைத் தெரிவித்தல்.

மேற்கண்ட பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் மனுக்களை மேற்பார்வை பொறியாளரிடம் நேரடியாகச் சமர்ப்பித்து, அதற்குரிய பயனைப் பெற்றுக்கொள்ளுமாறு மின் வாரியச் செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

நச்சுப் புகையால் திணறும் ஆன்மீக நவகிரக ஸ்தலம்;  திருவெண்காட்டில் தொடரும் சுகாதாரச் சீர்கேடு!
நச்சுப் புகையால் திணறும் ஆன்மீக நவகிரக ஸ்தலம்;  திருவெண்காட்டில் தொடரும் சுகாதாரச் சீர்கேடு!
நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..
நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..
ஆடிப் பௌர்ணமியில் ஜொலித்த ஆக்கூர்! - நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட திருவிளக்கு பூஜை!
ஆடிப் பௌர்ணமியில் ஜொலித்த ஆக்கூர்! - நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட திருவிளக்கு பூஜை!
காவிரியில் புனித நீராடி... அக்னி குண்டத்தில் இறங்கி... மயிலாடுதுறையைச் சிலிர்க்க வைத்த அக்னி விழா!
காவிரியில் புனித நீராடி...அக்னி குண்டத்தில் இறங்கி... மயிலாடுதுறையைச் சிலிர்க்க வைத்த அக்னி விழா!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Aadi Perukku holiday Bus : ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
Dhanush : ‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
Embed widget