மேலும் அறிய

ஏன் இந்த முக்குள தீர்த்தவாரி இவ்வளவு சிறப்பு? திருவெண்காட்டில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் முக்குள தீர்த்தவாரி பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான திருவெண்காட்டில், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் தீர்த்தவாரி பெருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.

தலப் பெருமையும் சிறப்புகளும்

திருவெண்காடு கிராமத்தில் அமைந்துள்ள பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 11-வது தலமாகப் போற்றப்படுகிறது. காசிக்கு இணையான ஆறு ஸ்தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் இத்திருத்தலம், பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளைத் தன்னுள் கொண்டது. இங்கு சிவபெருமானின் உக்கிர வடிவமும், சிவ அவதாரங்களில் மிக முக்கியமானதுமான அகோர மூர்த்தி  தனிச் சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். 

அதேபோல், நவகிரகங்களில் கல்வி, அறிவு மற்றும் வியாபாரத்திற்கு அதிபதியான புதன் பகவான் இத்தலத்தில் தனி சன்னதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அனுகிரகம் செய்கிறார். இதனால் இது புதன் பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலின் மற்றொரு பெரும் சிறப்பு, இங்கு அமைந்துள்ள முக்குளங்கள் ஆகும். அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என அழைக்கப்படும் இந்த மூன்று தீர்த்தக் குளங்களும் மருத்துவக் குணங்கள் மற்றும் ஆன்மிக அதிர்வுகள் நிறைந்தவையாகக் கருதப்படுகின்றன.

அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆனி மாத அமாவாசை தினமான இன்று, இத்திருக்கோவிலில் தீர்த்தவாரி நிகழ்வு வெகு விமரிசையாகத் தொடங்கியது. இதையொட்டி, காலை முதலே மூலவர் சுவேதாரண்யேஸ்வரர் மற்றும் பிரம்ம வித்யாம்பிகை அம்மனுக்கு சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, அஸ்திர தேவரை தீர்த்தக் கரைக்குக் கொண்டு வந்து. அங்கு அஸ்திர தேவருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி மற்றும் விசேஷ மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் கண் கொள்ளாக் காட்சியாக நடைபெற்றன. பின்னர், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

முக்குள தீர்த்தவாரி

பின்னர் அஸ்திர தேவர் முறைப்படி கோவிலில் உள்ள அக்னி, சூரியன், மற்றும் சந்திர தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டார்.
அஸ்திர தேவருக்கு அந்தந்த குளங்களின் கரைகளில் பூஜைகள் செய்யப்பட்டு, குளத்து நீரில் அஸ்திர தேவரை மூழ்கச் செய்து 'தீர்த்தம் அளிக்கும்' தீர்த்தவாரி நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆன்மிகப் பெருவிழாவிற்கான அனைத்து அர்ச்சனை மற்றும் தீர்த்தவாரி பூஜைகளையும் திருக்கோவில் அர்ச்சகர் ராஜப்பா குருக்கள் சாஸ்திர முறைப்படி, வேத மந்திரங்கள் முழங்க மிகச் சிறப்பாகச் செய்து வைத்தார்.

திரண்ட பக்தர்கள் கூட்டம்

ஆனி அமாவாசை மற்றும் தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவெண்காட்டில் குவிந்திருந்தனர். அஸ்திர தேவர் குளங்களில் தீர்த்தம் அளித்த அந்தப் புனிதமான தருணத்தில், குளக்கரைகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'நமச்சிவாய', 'அகோர மூர்த்திக்கு அரோகரா' என பக்தி கோஷங்களை எழுப்பியவாறு, முக்குளங்களிலும் புனித நீராடினர்.

அமாவாசை தினத்தில் இந்த முக்குளங்களில் நீராடி, சுவேதாரண்யேஸ்வரரையும், புதன் பகவானையும் வழிபட்டால் பித்ரு தோஷங்கள் நீங்கும், கல்வி ஞானம் பெருகும், தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். புனித நீராடலுக்குப் பிறகு, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அகோர மூர்த்தியையும், புதன் பகவானையும் தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (21.07.2026): மயிலாடுதுறை மாவட்ட வாசிகளே உஷார்! நாளை இந்த ஊர்களில் எல்லாம் கரண்ட் இருக்காது! முழு பட்டியல் இதோ!
Mayiladuthurai Power Shutdown (21.07.2026): மயிலாடுதுறை மாவட்ட வாசிகளே உஷார்! நாளை இந்த ஊர்களில் எல்லாம் கரண்ட் இருக்காது! முழு பட்டியல் இதோ!
உச்சக்கட்ட அவலம்: வேலை செய்யாத சிடி ஸ்கேன்... இரவில் மருத்துவர்களே இல்லாத அரசு மருத்துவமனைகள்!
உச்சக்கட்ட அவலம்: வேலை செய்யாத சிடி ஸ்கேன்... இரவில் மருத்துவர்களே இல்லாத அரசு மருத்துவமனைகள்! "நாங்க எங்கதான் போறது?" பொதுமக்கள் வேதனை..
மளிகை கடை என்ற பெயரில் நடந்த கொடூரம்: தனிப்படை சோதனையில் அம்பலமான ரகசியம்!
மளிகை கடை என்ற பெயரில் நடந்த கொடூரம்: தனிப்படை சோதனையில் அம்பலமான ரகசியம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Abbas Araghchi Vs Steve Witkoff: “ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
“ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
பட்ஜெட் மிட் SUV கார்கள்; மாருதி பிரெஸ்ஸா vs விக்டோரிஸ்- அம்சங்கள், மைலேஜ், விலை..எது பெஸ்ட்?
பட்ஜெட் மிட் SUV கார்கள்; மாருதி பிரெஸ்ஸா vs விக்டோரிஸ்- அம்சங்கள், மைலேஜ், விலை..எது பெஸ்ட்?
Embed widget