மேலும் அறிய

கட்டியும் பலனில்லை! 16 ஆண்டாக அந்தரத்தில் தொங்கும் பாலம்: கொந்தளிப்பில் மீனவ கிராம மக்கள்..

16 ஆண்டுகளாக அந்தரத்தில் நிற்கும் கீழமூவர்கரை - திருமுல்லைவாசல் பாலத்தின் இணைப்புச் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி 28 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் போக்குவரத்துத் தேவையை நிறைவேற்றும் நோக்கில் தொடங்கப்பட்ட பாலம் ஒன்று, கடந்த 16 ஆண்டுகளாகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் அந்தரத்தில் நிற்கும் அவலம் இப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரையிலான 10 கடலோர கிராமங்களையும், உப்பனாற்றின் மறுகரையில் அமைந்துள்ள கீழமூவர்கரை முதல் தரங்கம்பாடி வரையிலான 16 மீனவ கிராமங்களையும் இணைக்கும் வகையில் இந்த முக்கிய பாலம் திட்டமிடப்பட்டது. இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கும், கல்வி மற்றும் மருத்துவ அவசரங்களுக்கும் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயம் நிலவி வருவதால், இந்த பாலம் அப்பகுதி மக்களின் மிக முக்கியமான கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்த பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2010ஆம் ஆண்டு உப்பனாற்றின் குறுக்கே ரூபாய் 27 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தொடங்கப்பட்டன. இருப்பினும், காலம் செல்லச் செல்ல அரசுத்துறைகளின் சுணக்கமான செயல்பாடுகளால் இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றன. இதனால் ஆற்றின் மேற்பகுதியில் மட்டும் பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்டப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படவில்லை.

அதன் பின்னர், திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் மேற்கொண்டு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தமாக ரூபாய் 43 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் பாலத்தின் எஞ்சிய பணிகள் தொடர்ந்தன. எனினும், பல்வேறு நிர்வாகக் காரணங்களாலும், அதிகாரிகளின் அலட்சியப்போக்காலும் மக்களின் துயரம் தீரவில்லை.

பாலம் கட்டி முடிக்கப்பட்ட போதிலும், அதனை பிரதான சாலையோடு இணைக்கும் அணுகுசாலை அமைக்கும் பணி நடைபெறாமல் திட்டமிட்டே காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. குறிப்பாக, திருமுல்லைவாசல் பகுதியில் இணைப்பு அணுகுசாலை அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே இந்தச் சிக்கலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 

இதனால் ஆற்றின் நடுவே பிரம்மாண்டமாக நின்ற பாலம் எந்தவித பயனுமின்றி அந்தரத்தில் தொங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டது. பல கோடி ரூபாய் பொதுப்பணத்தில் உருவான இந்த பாலத்தை மக்கள் பயன்படுத்த முடியாமல் போனது இப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் மீனவ சமுதாயத்தினர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

பதினாறு ஆண்டுகளைக் கடந்தும் பாலப்பணிகள் முழுமை அடையாததால் கடும் அதிருப்தி அடைந்துள்ள கீழமூவர்கரை மற்றும் திருமுல்லைவாசல் உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், இனியும் மௌனமாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து திருமுல்லைவாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தீவிர சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். மக்களின் இந்த நியாயமான கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் பி. கல்யாணம் தலைமையில் இப்பகுதி மக்கள் சீர்காழி கோட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கோட்டாட்சியரிடம் வழங்கப்பட்ட மனுவில், பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் அணுகுசாலை பணிகளை உடனடியாகத் தொடங்கி, நில ஆர்ஜிதப் பணிகளை விரைவுபடுத்தி, பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலுவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, போராட்டம் நடத்தும் முடிவில் உறுதியாக இருப்பதாகப் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் அரசு நிர்வாகம் தங்களது வாழ்வாதாரப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறியது குறித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு இந்தப் பாலப் பணியை விரைந்து முடித்துத் தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் தற்போதைய ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உஷார் நிலையில் 14 காவல் நிலையங்கள்.. ஏன் தெரியுமா..?
மயிலாடுதுறை மாவட்டத்தில் உஷார் நிலையில் 14 காவல் நிலையங்கள்.. ஏன் தெரியுமா..?
ரோடு எங்கே இருக்கிறதென்றே தெரியலை..! மழையால் தீவுபோல் மாறிய கிராமம்..!
ரோடு எங்கே இருக்கிறதென்றே தெரியலை..! மழையால் தீவுபோல் மாறிய கிராமம்..!
மக்களே உஷார்! கரண்ட் ஷாக் விபத்துகளில் இருந்து தப்பிக்க மின்வாரியம் தரும் 12 சூப்பர் டிப்ஸ் இதுதான்..
மக்களே உஷார்! கரண்ட் ஷாக் விபத்துகளில் இருந்து தப்பிக்க மின்வாரியம் தரும் 12 சூப்பர் டிப்ஸ் இதுதான்..
சீர்காழியில் பரபரப்பு.. இட்லிக்கடைகாரரிடம் கள்ளத் துப்பாக்கி, தோட்டாக்கள், சாமி சிலைகள் பறிமுதல்!
சீர்காழியில் பரபரப்பு.. இட்லிக்கடைகாரரிடம் கள்ளத் துப்பாக்கி, தோட்டாக்கள், சாமி சிலைகள் பறிமுதல்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
Actor Dhanush : ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..? அரசியலில் புதுத் திருப்பம்!
‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..?
Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!
Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TVK On Stalin: Senior Generational Abuser ஸ்டாலின், அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
Senior Generational Abuser ஸ்டாலின் அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார்
ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார் பதிலடி
Embed widget