மேலும் அறிய

சீர்காழி பள்ளி சர்ச்சை: மாணவி தற்கொலை முயற்சி... ஆசிரியர் இடமாற்றம்... மாணவர் மறியல்!

சீர்காழி அருகே தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்குட்பட்ட கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் 22 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில காலமாக இப்பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த இந்திரகுமார் (43) என்பவரது செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வந்தன. தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக ஒரு தரப்பும், எதிராக மற்றொரு தரப்பும் செயல்பட்டு வந்ததால் பள்ளியில் அவ்வப்போது விரும்பத்தகாத சம்பவங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

மாணவி தற்கொலை முயற்சி மற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம்

சமீபத்தில் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரடி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் முடிவில் ஆசிரியர் மீதான புகார் பொய்யானது எனத் தெரியவந்தது. இதனிடையே, விசாரணையின் போது அதிகாரிகளிடம் கருத்து தெரிவித்த மாணவிகளை பொறுப்பு தலைமை ஆசிரியர் திட்டி மிரட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான 12-ஆம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவி ஒருவர், நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி உடனடி சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பொறுப்பு தலைமை ஆசிரியர் இந்திரகுமார் மற்றும் ஆசிரியர்கள் சத்தியவதி, மதனகோபால் ஆகிய மூவரையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

சாலை மறியல் போராட்டமும் உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையும்

பொறுப்பு தலைமை ஆசிரியர் இந்திரகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட தகவல் வெளியானதும், அவருக்கு ஆதரவாகப் பள்ளியின் தற்போதைய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் திரண்டனர். இந்த இடமாற்றத்தைக் கண்டித்தும், அவரை மீண்டும் அதே பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராகப் பணியமர்த்த வலியுறுத்தியும் பூம்புகார் - சீர்காழி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் பாலமுருகன், சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் தரங்கம்பாடி வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகளின் உறுதிமொழியைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ்

ஆரம்பத்தில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே பள்ளிக்கு வந்த இந்திரகுமாரை அவரது ஆதரவு மாணவர்கள் உற்சாகமாக அழைத்துச் சென்றனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பள்ளியில் தற்சமயம் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர்களும் படிப்படியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், புதிய தலைமை ஆசிரியர் பொறுப்பேற்கும் வரை இந்திரகுமாரே பொறுப்பு தலைமை ஆசிரியராகத் தொடர்வார் என்றும் உறுதி அளித்தார்.

புதிய தலைமை ஆசிரியர் வந்தவுடன் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு இந்திரகுமார் புதிய இடத்திற்கு மாறுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த சமரச தீர்வை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அமைதியாகக் கலைந்து சென்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுகவிலிருந்து தாவி தவெகவிற்கு வந்த கவுன்சிலர் ரஜினி.. கட்சியில் இணைந்த 3 மாதத்தில் அதிரடி நீக்கம்!
திமுகவிலிருந்து தாவி தவெகவிற்கு வந்த கவுன்சிலர் ரஜினி.. கட்சியில் இணைந்த 3 மாதத்தில் அதிரடி நீக்கம்!
சீர்காழி அருகே பரபரப்பு: பள்ளி மாணவர்கள் உட்பட 7 பேர் மீது கதண்டு வண்டுகள் கொடூரத் தாக்குதல்! 
சீர்காழி அருகே பரபரப்பு: பள்ளி மாணவர்கள் உட்பட 7 பேர் மீது கதண்டு வண்டுகள் கொடூரத் தாக்குதல்! 
மயிலாடுதுறை மாவட்டத்தில் உஷார் நிலையில் 14 காவல் நிலையங்கள்.. ஏன் தெரியுமா..?
மயிலாடுதுறை மாவட்டத்தில் உஷார் நிலையில் 14 காவல் நிலையங்கள்.. ஏன் தெரியுமா..?
ரோடு எங்கே இருக்கிறதென்றே தெரியலை..! மழையால் தீவுபோல் மாறிய கிராமம்..!
ரோடு எங்கே இருக்கிறதென்றே தெரியலை..! மழையால் தீவுபோல் மாறிய கிராமம்..!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
OMR ECR Road: OMR-லிருந்து ECR-க்கு புதிய இணைப்பு சாலை..! சோழிங்கநல்லூர் டூ மகாபலிபுரம் - இனி ஈசி பயணம்
OMR-லிருந்து ECR-க்கு புதிய இணைப்பு சாலை..! சோழிங்கநல்லூர் டூ மகாபலிபுரம் - இனி ஈசி பயணம்
Traffic e-Challan: ரூல்ஸ் மீறாட்டியும், ட்ராஃபிக் போலீஸ் FINE போட்டு இருக்காங்களா? ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?
ரூல்ஸ் மீறாட்டியும், ட்ராஃபிக் போலீஸ் FINE போட்டு இருக்காங்களா? ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?
TN Weather News: மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
Embed widget