மேலும் அறிய

மயிலாடுதுறையில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் - காரணம் இதுதான்

மயிலாடுதுறையில் அரசு அறிவித்த நிவாரணம் வழங்காதது, இன்சூரன்ஸ் குளறுபடி உள்ளிட்டவற்றை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்‌.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்காமல் விவசாயிகளை பயிர்க்காப்பீட்டு நிறுவனம் வஞ்சிபாபதாகவும், அதனை கண்டிக்கும் விதமாக விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிர் காப்பீட்டில் குளறுபடி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2023-2024 ஆம் ஆண்டில் விவசாயிகள் 1 லட்சத்து 79 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்தனர். பயிர் காப்பிட்டு தொகையாக ஒரு ஏக்கருக்கு 570 ரூபாய் வீதம் பிரிமியம் தொகை 9 கோடியே 98 லட்சம் ரூபாய் காப்பீட்டு நிறுவனத்தில் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் 16 கிராமத்திற்கு மட்டும் பயிர் காப்பீடு ஒரு ஏக்கருக்கு 500, 1000, 2000 ரூபாய் என குறைவான தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கியுள்ளது. ஒருசில கிராமங்களுக்கு மட்டும் அதிகபட்சமாக 6000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் - காரணம் இதுதான்

அமைச்சரிடம் முறையீடு 

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் கடந்த 11-ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சிதிட்டபணிகள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து பயிர் காப்பீடு திட்டம் என்ற பெயரில் காப்பீட்டு நிறுவனம் விவசாயிகளை வஞ்சிப்பதாகவும், அதற்கு வேளாண்துறை அதிகாரிகள் துணைபோவதாகவும் குற்றம்சாட்டி புகார் தெரிவித்தனர்.

மயிலாடுதுறையில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் - காரணம் இதுதான்

மேலும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு 20 சதவீதம் வழங்க வேண்டும், இல்லை என்றால் காப்பீடு எங்களுக்கு தேவையில்லை. பாண்டிச்சேரி, ஆந்திரா, கேரளா மாநிலத்தில் ஆண்டிற்கு குறுவை, சம்பா சாகுபடிக்கு தாலா 10 ஆயிரம் ரூபாய் என 20 ஆயிரம் ரூபாய் வழங்குவது போல் தமிழக விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

மயிலாடுதுறையில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் - காரணம் இதுதான்

பருவம் தவறி பெய்த மழை

கடந்த ஜனவரியில் பருவம் தவறி பெய்த மழையில் பாதிக்கப்பட்ட 980 ஹேக்டேருக்கு தமிழக அரசு 10 கோடி இழப்பீடு வழங்குவதாக அறிவித்ததாக தெரிவித்த விவசாயிகள், 8 மாதமாகியும் இழப்பீடு இதுவரை வழங்கவில்லை என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அமைச்சரிடம் வைத்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்ததாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் அப்போது தெரிவித்தனர். 

மயிலாடுதுறையில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் - காரணம் இதுதான்

விவசாயிகள் கூட்டம் 

அதனைத் தொடர்ந்து இதுநாள் வரையிலும் எந்த உரிய நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கவில்லை என குற்றம் சட்டியுள்ள விவசாயிகள் மயிலாடுதுறை நகரப் பூங்காவில் டெல்டா பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர் இயற்கை விவசாயி ஆனதாண்டவபுரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் தலைமையில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அனைத்து குறைகளும் நிறைவேற்றுவதற்காக விவசாயிகள் ஒன்றிணைந்து மாபெரும் சாலை போராட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்தாண்டு கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து சம்பா பயிர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும்.

மயிலாடுதுறையில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் - காரணம் இதுதான்

சாலைமறியல் போராட்டம் 

பயிர் காப்பீட்டு தொகையை பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கிட வேண்டும், பயிர் காப்பீட்டு நிறுவனத்தை அரசே ஏற்று நடத்திட வேண்டும், வேளாண் துறையில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை மூன்றாண்டுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானத்தை நிறைவேற்றினர். மேலும் சாலை மறியல் போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார்.

மயிலாடுதுறையில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் - காரணம் இதுதான்

வழக்கு பதிவு 

இந்நிலையில் கடந்த 15-ம் தேதி மயிலாடுதுறை நகர பூங்காவில் நடந்த விவசாயிகள் சங்க கூட்டத்தில் அன்பழகன் பேசியுள்ளார்‌. அப்போது அவர் பேசியது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை பாலசரஸ்வதி மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், விவசாயிகள் சங்க தலைவர் அன்பழகன் அரசு அதிகாரிகளை கேவலப்படுத்தி பேசியதாகவும், விவசாயிகளை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததாகவும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல்துறையினர் அரசு ஊழியர்களை கேவலமாக பேசியது, அரசுக்கு எதிராக விவசாயிகளை போராடத் தூண்டியது என்பது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறையில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் - காரணம் இதுதான்

விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் 

விவசாயிகள் அறிவித்தவாறு மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரண தொகையாக ரூ.10 கோடி அறிவித்தது‌. ஆனால் இந்த தொகை இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து மயிலாடுதுறையில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறையில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் - காரணம் இதுதான்

அப்போது, தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையை காலதாமதம் இன்றி உடனடியாக வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டு நிறுவனம் நேர்மையான முறையில் இழப்பீடுகளை கணக்கீடு செய்து இழப்பீட்டுத் தொகை மற்றும் பயனாளிகள் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும், மத்திய மாநில அரசுகள் பயிர் காப்பீட்டு நிறுவனங்களில் தற்போது கணக்கீடு செய்யும் முறையில் உள்ள குழப்பமான நடைமுறைகளில் உரிய மாற்றங்களை செய்திட வேண்டும், பயிர் காப்பீட்டு நிறுவனங்களை அரசு ஏற்று நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும், இந்த சாலை மறியல் போராட்டம் தொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய விவசாயி அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை திரும்பப் பெறவும் விவசாயிகள் வலியுறுத்தினர். இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
"தமிழர்களின் சுயமரியாதை" தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கொதித்த கார்கே!
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
Embed widget