மேலும் அறிய

விவசாயிகளே! ஆகஸ்ட் 26-ஐ மறக்காதீங்க! மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த மாதத்திம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கலந்துக்கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். 

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் விவசாயம் சார்ந்த துறை சார்ந்த அதிகாரிகளுடன் விவசாயிகளும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை அரசிடம் தெரிவித்து அதற்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 26 -ம் தேதி நடைபெறும் கூட்டம் 

அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருகின்ற ஆகஸ்ட் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தின் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தலைமையில் 26.08.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்துகொள்ளும் துறைகள்

 

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று

  • வேளாண்மை 
  • நீர்ப்பாசனம்
  • கால்நடை
  • கூட்டுறவு
  • மின்சாரம்
  • வேளாண்மை
  • பொறியியல்துறை
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்
  • தோட்டக்கலை துறை

ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம். 

விவசாயிகளுக்கு அனுமதி 

மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேச விரும்பும் விவசாய சங்க தலைவர்கள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் அனைவரும் கூட்டம் நடைபெறும் நாள் அன்று காலை 9.30 மணி முதல் பதிவு மேற்கொண்டு டோக்கன் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் இருந்து சங்க தலைவர்களும், தனிப்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை பேசலாம் என கூறப்பட்டுள்ளது.

பிரதான தொழிலான விவசாயம் 

டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் நடைபெறுகிறது. சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாவட்டத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நிலத்தடி நீரை கொண்டு இப்பகுதியில் அதிக விவசாயம் நடைபெறுவதால் சம்பா மற்றும் குறுவை சாகுபடி பெருமளவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் நெல் மற்றும் இன்றி மாற்று பயிராக வாழை, கரும்பு, மஞ்சள், பருத்தி, மற்றும் காய்கறி வகைகளும் பயிரிடப்பட்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயத்தை தீவிரமாக செய்து வருகின்றன. இந்த நிலையில் அரசு அறிவிக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பயன்களை முழுமையாக பெறுவதற்கும் தங்கள் குறைகளை அரசுக்கு தெரிவிப்பதற்கும் இந்த விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இவ்மாவட்டத்தில் பார்க்கப்படுகிறது. 

மேலும் காவிரி நீர் முழுமையாக திறக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் தூர்வாரும் பிரச்சினை இருந்து வருவதாலும், மேலும் பல இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில் விவசாயிகள் நெல் மூட்டைகள் உடன் காத்திருக்கும் நிலை நிலவுவதால் இது தொடர்பாக கூட்டத்தில் விவசாயிகள் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Mayiladuthurai Power Shutdown (31.10.2026): மின் நுகர்வோர் கவனத்திற்கு: நாளை காலை முதல் மாலை வரை மின் விநியோகம் இருக்காது - முழுப் பட்டியல்..
Mayiladuthurai Power Shutdown (31.10.2026): மின் நுகர்வோர் கவனத்திற்கு: நாளை காலை முதல் மாலை வரை மின் விநியோகம் இருக்காது - முழுப் பட்டியல்..
விவசாயிகள் கவனத்திற்கு: குறைந்த கட்டணத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வது எப்படி?
விவசாயிகள் கவனத்திற்கு: குறைந்த கட்டணத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வது எப்படி?
உயிர் காக்கும் உன்னத சேவை:TNTJ திருமுல்லைவாசல் கிளைக்குத் தேடிவந்த மாபெரும் அரசு அங்கீகாரம்!
உயிர் காக்கும் உன்னத சேவை:TNTJ திருமுல்லைவாசல் கிளைக்குத் தேடிவந்த மாபெரும் அரசு அங்கீகாரம்!
தீபாவளி ஸ்பெஷல் ரயில்கள்: அக்டோபர் 29 முதல் முன்பதிவு தொடக்கம்  
தீபாவளி ஸ்பெஷல் ரயில்கள்: அக்டோபர் 29 முதல் முன்பதிவு தொடக்கம்  

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK On Stalin:: ”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
Embed widget