மேலும் அறிய

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு நற்செய்தி! மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மோட்டார் சைக்கிள், சக்கர நாற்காலி மற்றும் காதொலி கருவிகள் வழங்க அலிம்கோ சிறப்பு முகாம் செப்டம்பர் 15, 16 தேதிகளில் நடைபெறுகிறது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக, மத்திய அரசின் அலிம்கோ (ALIMCO) நிறுவனத்தின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான பல்வேறு வகையான நவீன உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்புத் தேர்வு முகாம்கள் நடைபெறவுள்ளன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தகுதியான மாற்றுத்திறனாளிகள் இந்த முகாம்களில் பங்கேற்றுப் பயனடையுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களின் அன்றாட செயல்பாடுகளை எளிதாக்கவும் அரசு பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில், இந்த சிறப்பு முகாம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழங்கப்படவுள்ள உதவி உபகரணங்களின் விவரங்கள்

இந்தச் சிறப்புத் தேர்வு முகாமில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கேற்பப் பல்வேறு வகையான நவீன உபகரணங்கள் தகுதியான நபர்களுக்குத் தேர்வு செய்து வழங்கப்படவுள்ளன. இதில் காது கேளாதோருக்கான நவீன காதொலி கருவிகள், உடல் இயக்கம் பாதிக்கப்பட்டோருக்கான கைமுறையாக இயக்கும் சக்கர நாற்காலிகள், நடப்பதற்கு வசதியான ஊன்றுகோல்கள் ஆகியவை அடங்கும்.

மேலும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு கற்றல் உபகரணங்கள், பார்வை குறைபாடுடையோருக்கான சிறப்பு ஊன்றுகோல்கள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான பிரத்யேக பாதுகாப்பு உபகரணங்களும் தேர்வு செய்யப்படவுள்ளன. 

இவை தவிர, கடும் உடல் ஊனம் கொண்ட மாற்றுத்திறனாளிகளின் பயணங்களை எளிதாக்கும் வகையில் மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலிகள் மற்றும் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர சைக்கிள்கள் போன்ற அதிநவீன சாதன பெற விரும்புவோரும் இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் நேரங்கள்

இந்தச் சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய கோட்டப் பகுதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை கோட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் தேர்வு முகாம் வரும் 15.09.2026 அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள துயர்துடைப்பு நாள் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. 

அதேபோன்று, சீர்காழி கோட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் 16.09.2026 அன்று புதன்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலக (BDO Office) வளாகத்தில் நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பொதுமக்கள் வந்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுள்ளனர்.

தேவையான சான்றிதழ்கள் மற்றும் முக்கிய நிபந்தனைகள்

இம்முகாமில் கலந்து கொண்டு உதவி உபகரணங்களைப் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் சில முக்கியமான அசல் மற்றும் நகல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை (Disability ID Card), மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID Card), பாஸ்போர்ட் அளவிலான சமீபத்திய புகைப்படங்கள், குடும்ப அட்டை (Ration Card) மற்றும் வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) ஆகிய அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும். மேலும், ஏற்கனவே கடந்த 19.06.2026 முதல் 25.06.2026 வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அலிம்கோ முகாம்களில் கலந்து கொள்ளாத மற்றும் இதுவரை உதவி உபகரணங்கள் பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டுமே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடைய முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.

மாவட்ட ஆட்சியரின் அழைப்பு

மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் இத்தகைய சிறப்பு முகாம்களை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மயிலாடுதுறை மற்றும் சீர்காழி கோட்டங்களைச் சேர்ந்த தகுதியுடைய நபர்கள் தங்களுக்குரிய சான்றுகளுடன் குறித்த நேரத்தில் முகாமில் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்களைப் பெற்றுத் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"அரசு செய்யல... நாங்களே பண்ணிக்கிறோம்!" - ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டிய கிராமம்!
ஜப்பான், தைவான் பக்தர்களை ஈர்த்த தமிழ்நாட்டு ஆன்மீகம்: சீர்காழி ஒளிலாய குருபூஜை சிறப்பம்சங்கள்!
ஜப்பான், தைவான் பக்தர்களை ஈர்த்த தமிழ்நாட்டு ஆன்மீகம்: சீர்காழி ஒளிலாய குருபூஜை சிறப்பம்சங்கள்!
Mayiladuthurai Power Shutdown (06.10.2026) : மயிலாடுதுறையில் 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? - முழு விவரம்
Mayiladuthurai Power Shutdown (06.10.2026) : மயிலாடுதுறையில் 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? - முழு விவரம்
எஸ்.பி. சினேகா பிரியா மேற்பார்வையில் கெத்து காட்டிய மயிலாடுதுறை பெண் காவலர்கள்!  
எஸ்.பி. சினேகா பிரியா மேற்பார்வையில் கெத்து காட்டிய மயிலாடுதுறை பெண் காவலர்கள்!  
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget