இந்த தாடியா அந்த தாடியா? மோடியை சீண்டிய கமல்..

ஜெயலலிதா பாணியில் அவர் மோடி பெயரை சவாலுக்கு அழைத்து இருப்பது அரசியல் களத்தை சூடு பிடிக்க செய்துள்ளது.

FOLLOW US: 

இந்த தாடியா அந்த தாடியா என பாஜகவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சவால் விடுத்துள்ளார். திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், தான் நேர்மையானவன் என்றும் ஒழுங்காக வருமான வரி கட்டி வருபவன் என்றும் தெரிவித்தார். 

பாஜகவின் பீ டீம் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாடியா அந்த தாடியா என பார்த்துவிடலாம் என பிரதமர் மோடியை குறிப்பிட்டு பேசினார். இட ஒதுக்கீடு தொடர்பான கமல்ஹாசன் பேசியது சர்ச்சை ஆன நிலையில், தற்போது ஜெயலலிதா பாணியில் அவர் மோடி பெயரை சவாலுக்கு அழைத்து இருப்பது அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளது. 

2014 நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக பாஜகவின் பீ டீம் என்ற விமர்சனம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் வைக்கப்பட்டது. அதற்கு பதிலடி தரும் விதமாக 'மோடியா இந்த லேடியா' என பிரச்சாரத்தில் ஜெயலலிதா பேசியது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags: Modi tn election Kamalhassan mnm jayalalitha Makkal Neethi Maiam

தொடர்புடைய செய்திகள்

கும்கி யானைகளுக்கு கொரோனா இல்லை : பரிசோதனை முடிவுகளால் வனத்துறை நிம்மதி..!

கும்கி யானைகளுக்கு கொரோனா இல்லை : பரிசோதனை முடிவுகளால் வனத்துறை நிம்மதி..!

மயிலாடுதுறை: "தமிழ்நாட்டை ஒரு மாதத்தில் முன்னேற்றி கொண்டு வந்துள்ளோம்" - அமைச்சர் எம்.ஆர்.கே‌.பன்னீர்செல்வம்.

மயிலாடுதுறை:

டெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்

டெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்

திருவண்ணாமலை : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் அதிகரிப்பு..!

திருவண்ணாமலை : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் அதிகரிப்பு..!

தேனி : தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்று..!

தேனி : தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்று..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!