மேலும் அறிய

”எங்களுக்கு கருப்பும் தேவை, சிவப்பும் தேவை” - பி.ஜே.பி அண்ணாமலை பேச்சு !

"எங்களுக்கு கருப்பும் தேவை, சிவப்பும் தேவை. எதையும் நாங்கள் ஒதுக்கவில்லை. எல்லா நிறமும் எங்களுக்கு தேவை" -  பி.ஜே.பி மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு.

வீர பாண்டிய கட்டபொம்மனின் 263வது பிறந்தநாளையொட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பாஜக சார்பாக மாநில தலைவர் அண்ணாமலை, காயத்ரி ரகுராம், மதுரை மாநகர் தலைவர் டாக்டர் சரவணன் , முன்னாள் சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  அப்போது மாநிலத்தலைவர் அண்ணாமலை ”கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்து பாஜக தோற்கடிக்கும் என ஆ.ராசா எந்த அர்த்தத்தில் பேசினார் எனத் தெரியவில்லை. பாஜக அனைவரையும் ஒருங்கிணைத்து செல்கிறது. கருப்பு, சிவப்பு, நீலம் மட்டுமல்ல; அனைத்து நிறங்களும் தேவை. எங்களுக்கு கருப்பும் தேவை, சிவப்பும் தேவை. எதையும் நாங்கள் ஒதுக்கவில்லை. எல்லா நிறமும் எங்களுக்கு தேவை. எதையும் நாங்கள் ஒதுக்கவில்லை. ஆ.ராசா வேண்டுமானால் நிறத்தை வைத்து அரசியல் செய்யட்டும்.

”எங்களுக்கு கருப்பும் தேவை, சிவப்பும் தேவை” - பி.ஜே.பி அண்ணாமலை பேச்சு !
பி.ஜே.பியை பொறுத்தவரை எல்லா நிறங்களை வைத்தும், அனைத்து மக்களை வைத்தும் அரசியல் செய்ய வேண்டும் என நினைக்கிறது. காங்கிரஸ் ஒரு காற்றடைத்த பலூன் போல இருப்பதால்தான் ராகுல்காந்தி அவ்வப்போது பறந்து கொண்டே இருக்கிறார். ஒரு அகில இந்திய கட்சியின் தலைவர் அவ்வப்போது நாட்டை விட்டுபறந்து போகிறார். இதற்கு கே.எஸ்.அழகிரி பதில் சொல்ல வேண்டும். பி.ஜே.பி நிலைப்பாடு ஒன்றே ஒன்று மட்டும் தான். இந்தியாவில் காங்கிரஸ் முடித்து வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அது விரைவில் நடக்கும்.

”எங்களுக்கு கருப்பும் தேவை, சிவப்பும் தேவை” - பி.ஜே.பி அண்ணாமலை பேச்சு !
நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் பாகவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என வைகோ பேசியது குறித்த கேள்விக்கு.
உபியில் 2019ஆம் ஆண்டு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பி.ஜே.பியை எதிர்த்து பார்த்தார்கள். அது நடைபெறவில்லை. எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் பி.ஜே.பியை தோற்கடிக்க முடியாது என தெரிந்து தான் தற்போது உபியில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக களம் காண்கிறார்கள்.
அது போல வைகோ வேகமாக பேசுகிறார். எத்தனை கட்சிகள் பி.ஜே.பி எதிராக சேர்ந்தாலும் கூட மக்கள் பி.ஜே.பி பக்கம் உள்ளனர். எனவே அது பற்றி கவலையில்லை. பி.ஜே.பி  நிகழ்ச்சி மாநில அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் படி தான் நடக்கும். அதில் தெளிவாக உள்ளோம். பாரத பிரதமரின் நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சி. மாநில அரசு பிரதமரை அழைத்துள்ளனர். அந்த நேரத்தில் பி.ஜே.பி கட்சி நிகழ்ச்சி நடத்த விரும்புகிறது. அது முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாடுகள் படி தான் நடக்கும். மாநில அரசின் கொரானா கட்டுப்பாடுகளை தமிழக பி.ஜே.பி ஒரு சதவீதம் கூட மீறாது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மத்திய அமைச்சர் சிந்தியாவின் கருத்தை மாற்றி திரித்து இங்கு பரப்புகின்றனர். யாரும் கலாச்சாரத்தை மாற்றவில்லை. காங்கிரஸ் தான் கலாச்சாரத்தை மாற்றுகிறது. மோடி எங்களோடு பொங்கல் கொண்டாடுவதால் அது மோடி பொங்கல். பி.ஜே.பி பொங்கல் விழா உறுதியாகி பிரதமர் மோடி நம்மோடு சேர்ந்து பொங்கல் வைத்தால் அது தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கு பெருமை.

”எங்களுக்கு கருப்பும் தேவை, சிவப்பும் தேவை” - பி.ஜே.பி அண்ணாமலை பேச்சு !
 
 
திமுகவில் குழப்பம் உள்ளது. ஒரு புறம் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என திமுகவினர் கூறும் போது, நிதியமைச்சர் வேண்டாம் என்கிறார். இதிலிருந்தே திமுகவில் குழப்பம், முரண்பாடு உள்ளது தெரியும். தமிழக மக்கள் தான் தெரிந்து கொள்ள வேண்டும். டி.ஆர்.பாலுவும், நிதியமைச்சரும் உட்கார்ந்து பேசி ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் விலை வருமா வராதா என முடிவெடுத்து கூற வேண்டும்” என்றார்.
 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சை கோயில் நில அபகரிப்பு? லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
தஞ்சை கோயில் நில அபகரிப்பு? லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
கல்லலில் திருக்குறள் விழா: 550 மாணவர்களுக்கு வாழ்வியல் பொக்கிஷம்!
கல்லலில் திருக்குறள் விழா: 550 மாணவர்களுக்கு வாழ்வியல் பொக்கிஷம்!
kodaikanal : சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! 5 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சுற்றுலாத் தலங்கள்!
kodaikanal : சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! 5 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சுற்றுலாத் தலங்கள்!
பழனி நில மோசடி வழக்கு: 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி!
பழனி நில மோசடி வழக்கு: 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
WPL 2027: அடுத்த கப்பை குறிவைக்கும் RCB! ஏலத்தில் நச்சுனு எடுத்த 4 வீராங்கனைகள்! யார்? யார்?
WPL 2027: அடுத்த கப்பை குறிவைக்கும் RCB! ஏலத்தில் நச்சுனு எடுத்த 4 வீராங்கனைகள்! யார்? யார்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
Embed widget