முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உரிமைகளை இழந்த தமிழகம்.. முழு விபரம் இதோ.!
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு ஒவ்வொரு செயல்களிலும் தங்களுக்கு ஏதுவான சூழலை உருவாக்கி உள்ளது.
தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், குறிப்பாக தேனி மாவட்டத்தின் விவசாயத்தின் உயிர்நாடியாக விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணை தமிழக கேரள எல்லை கேரள மாநிலம் குமுளி தேக்கடியில் உள்ளது. அணை விவகாரத்தில் கேரள அரசு அணை பலவீனமாக உள்ளது எனவும், அணைக்கு எதிரான பல்வேறு விமர்சனங்களையும் குறிப்பாக அணை இடிந்து விழும் சூழலில் உள்ளதால் அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் எனவும் அணைக்கு எதிரான பல்வேறு கருத்துக்களையும் கூறி வருகிறது.
கேரள அரசு மட்டுமல்லாமல் கேரளாவைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசோ அதற்கு எதிராக அதாவது முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரள அரசு எதிர்கொள்ளும் செயல்களுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு சூழ்நிலைகளில் மௌனமாகவே உள்ளது என தமிழக விவசாயிகள் கூறுகின்றனர்
அணை விவகாரத்தில் தமிழக அரசு இழந்த உரிமைகள்
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என கேரளாவின் பரப்புரை தமிழகம் முல்லைப் பெரியாறு அணை உரிமையை படிப்படியாக இழக்க நேரிடுகிறது. முதலில் அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. தேக்கடி ஏரியில் படகில் பயணித்து அணையைக் காண தடை விதிக்கப்பட்டது. கேரள புலிகள் காப்பக வனத்துறையினர் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறையின் ஊதியத்தின் மூலம் கேரள போலீசார் பணியமர்த்தப்பட்டனர். முல்லைப் பெரியாரின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான முல்லை குடிக்கு செல்ல தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கேரள அதிகாரிகளால் முல்லைப் பெரியாறு அணை அருகே மின்சார கம்பியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்ததை அடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பிற்பகல் 3:30 மணிக்கு மேல் தமிழக அரசு அதிகாரிகளுக்கு தேக்கடியில் இருந்து படகு மூலமும், வல்லக்கடவிலிருந்து வாகனம் மூலமும் முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் தேக்கடி தலைமை மதகுப்பகுதி தமிழக அரசின் சுற்றுலா மாளிகைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாக கருதப்படும் தேக்கடியில் ரிசல்ட் தங்கும் விடுதிகளும் கட்ட கேரளாவுக்கு குமுளி ஊராட்சி அனுமதி அளித்தது. முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக கருதப்படும் தேக்கடி ஆணவச் சாலில் வாகன நிறுத்துமிடம் அமைத்து கேரள அரசு தற்போது வாகன வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் தேக்கடி வனப்பகுதியில் அதாவது முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளை அளவீடு செய்ய சென்ற தமிழக அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது கேரள வனத்துறை.
முல்லைப் பெரியாறு அணையின் பராமத்துப் பணிகளுக்காக தளவாடப் போர்க்களத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. வல்லக்கடவு அருகே வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை சீரமைக்க தற்போது வரை அனுமதிக்கப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணையின் பணிகளுக்காக செல்லும் தமிழக அரசு அதிகாரிகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்பே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தேக்கடியில் ஏரியில் தமிழக அரசின் சார்பில் இயக்க ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட படகு தற்போது வரை இயக்கப்படாமல் பழுதாகி கிடப்பில் உள்ளது.
நீர்மட்டத்தை குறைக்கும் நோக்கில் புதிதாக ”ரூல்கர்” முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைமையிலான ஆய்வின் போது முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையின் அருகில் உள்ள பேபி அணையை பலப்படுத்தினால் 152 அடி தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதற்கு கேரள அரசு தண்ணீரை தேக்க விடாமல் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணைக்கு 2000 ஆம் ஆண்டில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் 20 ஆண்டுகளுக்குப் பின் 2020 ஆம் ஆண்டில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டதை தவிர வேறு எந்த உரிமையையும் தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையில் பெறவில்லை. இந்த சூழலில் தான் முல்லைப் பெரியாறு அணையின் சட்டப் போராட்டங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கேரள அரசு முன்னெடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டும் திட்டம் . கேரளாவின் புதிய அணைக்கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசின் சார்பில் சுற்றுப்புற சூழல் அனுமதி கேரளாவிற்கு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. அதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயார் செய்துள்ளது கேரள அரசு. தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு கீழ் திசையில் 366 மீட்டரில் அணை கட்டுவதற்கான புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இனியும் தமிழகம் சுதாரிக்கா விட்டால் இழந்த உரிமையை மீட்டெடுக்க முடியாமலும் அணையை இழக்க நேரிடும் என தமிழக விவசாயிகளிடம் கூறுகின்றனர்..