மேலும் அறிய
Advertisement
Southern Railway ; செகந்திராபாத் - ராமநாதபுரம் ரயில் சேவை நீட்டிப்பு ! முழு விபரம்
இந்த சிறப்பு ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
செகந்திராபாத் சிறப்பு விரைவு ரயில்களின் சேவை நீட்டிப்பு
செகந்திராபாத் - ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு விரைவு ரயில்களின் சேவையை மேலும் மூன்று மாத காலத்திற்கு நீட்டித்து தென்மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி செகந்திராபாத் - இராமநாதபுரம் சிறப்பு ரயில் (07695) ஜனவரி 1, 8, 15, 22, 29, பிப்ரவரி 5, 12, 19, 26, மார்ச் 5, 12, 19, 26 ஆகிய புதன்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 09.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.45 மணிக்கு இராமநாதபுரம் வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் (07696) ஜனவரி 03, 10, 17, 24, 31, பிப்ரவரி 07, 14, 21, 28, மார்ச் 07, 14, 21, 28 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 09.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும். இந்த ரயில்கள் நலகொண்டா, மிரியால் குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், காவாலி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணவும் பாஸ் - Sleeping Tablets: தூக்க மாத்திரை பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு பெரிய ஆபத்து இருக்கு..! உடனே செய்ய வேண்டியவை..
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Vijayakanth: "ஏழைகள் வாழ" கடவுளாக மாறிய விஜயகாந்த்! மக்கள் கடலில் மூழ்கிய கேப்டன் நினைவிடம்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion