மேலும் அறிய

சாத்தான்குளம் வழக்கு: நேரடி தொடர்பு என தலைமை காவலர் முருகன் தரப்பு வாதத்தால் பரபரப்பு 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. ரவிச்சந்திரனுக்கும்  வழக்கில் நேரடி தொடர்பு என தலைமை காவலர் முருகன் தரப்பு வாதத்தால் பரபரப்பு 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். 
 
இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்றுவருகிறது. இந்த வழக்குகளில் 104 சாட்சிகளில் இதுவரை 46சாட்சிகளிடம் சாட்சிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது.
 
 அப்போது  இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும்  நேரில் ஆஜராகினர். 
 
வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில் நீதிபதி முன்பாக வழக்கில் முக்கிய சாட்சியான தலைமை காவலர் ரேவதி  ஆஜராகி பகுதியாக சாட்சியம் அளித்தார். 
 
இதனையடுத்து கொலை வழக்கில் நான்காவது எதிரியாக இருக்கும் தலைமை காவலர் முருகன் தரப்பில் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ்- ஐ கொன்றதில், ஏற்கனவே இவ்வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து சென்றுள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் என்பவருக்கும் இந நேரடி தொடர்பு உள்ளது. எனவும் அவரையும் இந்த வழக்கில் எதிரியாக உடனே சேர்க்க வேண்டும் என்று தீவிரமாக வாதம் வைக்கப்பட்டது. இந்த வாதம் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு வழக்கையும் பரபரப்பாக்கியுள்ளது.
 
இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும்  16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரத்தில் இருந்து தகவல் தெரிவித்தனர்.
 
 
 
 
 
 
 
 

தலைப்பு செய்திகள்

பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget