மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
சாத்தான்குளம் கொலை வழக்கு தீர்ப்பிற்காக ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு
குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையை சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட காலகெடுவிற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை தீர்ப்பிற்காக ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீதும் பிரிவு 120பி மற்றும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அனுமதிக்க கோரி சிபிஐ தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
சிபிஐ ஏடிஎஸ்பி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போலீஸார் என 9 பேர் மீது சிபிஐ கொலை வழக்கு பதிந்தது.
இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கில் இதுவரை இரண்டு குற்ற பத்திரிகைகள் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு பதிவின் போது ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் மீதும் இபிகோ 120 பி (கூட்டு சதி) பிரிவில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் மறுத்தது.
இதுதொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனு விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த பிரிவுகளில் குற்றம் புரிந்தமைக்கு போதிய ஆதாரங்கள் உள்ளது. குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையை சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட காலகெடுவிற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, உரிய குற்றப்பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யாததை விசாரணை இறுதியில் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது இபிகோ 120பி பிரிவிலும், மேலும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்." என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில், சாட்சியங்களை விசாரணை செய்து மேலும் ஒரு குற்ற பத்திரிகை என இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவே வழக்கில் சில பிரிவுகளை சேர்க்க கீழமை நீதிமன்றம் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 நபர்களும் வழக்கில் போதுமான பிரிவுகள் சேர்க்கப்பட்டு விட்டது. மேலும் பிரிவுகள் சேர்க்க அனுமதிக்க கூடாது கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். இதனையடுத்து நீதிபதி, வழக்கை தீர்ப்பிற்காக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion