மேலும் அறிய

10 ஆயிரத்து 944 கோவில்களில் சொத்து ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன - இந்து சமய அறநிலையத்துறை

10 ஆயிரத்து 944 கோவில்களில் சொத்து ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன - இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கோவிலின் தல புராணம், கோயில் பூஜை கட்டணங்கள், போன்றவற்றை இணைய தளத்தில் பதிவிடக் கோரிய வழக்கை முடித்துவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த  கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்," கோயிலுக்கு சொந்தமான இடங்கள், பூஜை கட்டண விபரங்களை கோயில் முன் அனைவரும் பார்க்கும் விதமாக பட்டியல் இடக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோவில்களில் தல வரலாறு அதன் பழமை மற்றும் வரலாறு முக்கியத்துவம் தொடர்பான விவரங்கள் அடங்கிய பலகை வைக்கப்பட்டுள்ளது.

தல புராணங்கள் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துவது, ஓலைச்சுவடிகள், தகடுகள் மற்றும் அரிய புத்தகங்களில் உள்ள விபரங்களை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அன்னைத் தமிழில் அர்ச்சனை 48 பழமையான கோவில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான பூசாரிகளின் தொடர்பு எண்களும் பெயர்களும் அடங்கிய தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. அன்னைத்தமிழ் போற்றிப் புத்தகங்கள் என 14 புத்தகங்கள் 2021 ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. கோவில்களில் பூஜை நேரங்கள், பூஜை வகைகள், அதற்கான கட்டணங்கள், சொத்து விபரங்கள், ஆக்கிரமிப்பில் இருக்கும் சொத்துக்கள், வாடகை விடப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய தகவல் பலகை பல கோவில்களில் வைக்கப்பட்டுள்ளது. பிற கோவில்களிலும் வைக்க தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 2.04 லட்சம் ஏக்கர் நஞ்சை நிலங்களும், 2.53 லட்சம் ஏக்கர் நஞ்சை நிலங்களும் 0.21 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களும் உள்ளன. 22,006 கட்டிடங்கள் பயன்பாட்டிலும், 33 ஆயிரத்து 665 கட்டிடங்கள் காலியாகவும் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 44 ஆயிரத்து 82 கோவில்கள் உள்ள நிலையில், கோவில் சொத்துக்களை அடையாளம் காண்பதற்காக 40 ஆயிரத்து 584 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 18496 கோவில்களின் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கோவில் நிலங்களை அடையாளம் காண்பதற்காக, 8 துணை ஆட்சியர்கள், 18 வட்டாட்சியர்கள், 2 துணை வட்டாட்சியர்கள், 18 நில அளவையர், 3 வருவாய் அலுவலர் மற்றும் 9 கிராம நிர்வாக அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சொத்துக்களை அளவீடு செய்ய சிறப்புக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. நில அளவீடு பணிகளை துரிதப்படுத்த, 100 நில அளவையர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

10 ஆயிரத்து 944 கோவில்களில் சொத்து ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. கோவில் தொடர்பான கட்டணங்கள் நிகழ்வுகள் போன்றவற்றை நவீன முறையில் இணைய வழியில் கையாளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 48 பழம் பெருமை வாய்ந்த கோவில்களில் 2064 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது

இதுபோன்ற பல நடவடிக்கைகள் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

மற்றொரு வழக்கு

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாஞ்சோலை போராளிகள் வீரவணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பீமாராவ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாஞ்சோலை போராளிகள் வீரவணக்க நினைவேந்தலை முன்னிட்டு 31.07.2022 அன்று கல்யாணி திரையரங்கம் அருகே பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். இதற்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் 14.07.22 அன்று அனுமதி அளிக்கும்படி மனு அளித்திருந்தோம். ஆனால் 17.07.22 அன்று போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படவும்; சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறி அனுமதி மறுக்கப்பட்டது. எனவே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு குறித்து அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”Illaiyaraja Deva Controversy | “நான் காசு வெறி புடிச்சவனா” இளையராஜா மீது தேவா ATTACK அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Embed widget