நிலக்கோட்டை: இன்ஸ்டாகிராம் காதல், ஆணவக் கொலை! மாமனார், மகனுக்கு குண்டர் சட்டம் - பரபரப்பு!
இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து காதல் திருமணம் செய்த மருமகனை ஆணவக் கொலை செய்த மாமனார், மைத்துனரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு.
நிலக்கோட்டை அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து காதல் திருமணம் செய்த மருமகனை ஆணவக் கொலை செய்த மாமனார், மைத்துனரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு.
நிலக்கோட்டை அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து காதல் திருமணம் செய்த மருமகனை ஆணவக் கொலை செய்த மாமனார், மைத்துனரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அடுத்த, விராலிப்பட்டி அருகே, இராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24) பால்கறக்கும் தொழிலாளியான இவர் விருவீடு அருகே கணபதிபட்டி கிராமத்தில் வசித்து வரும் சந்திரன்(49) என்பவரின் மகள் ஆர்த்தி(21) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ராமச்சந்திரன், ஆர்த்தி ஆகிய இருவரும் இரு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதல் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், இதனையடுத்து கடந்த 12.10.2025 அன்று ராமச்சந்திரன் வழக்கம்போல பால் கறக்கும் வேலைக்கு சென்றுள்ளார் அப்போது, நிலக்கோட்டை அடுத்த கூட்டாத்து அய்யம்பாளையம் அருகே சென்றபோது அவரை வழிமறித்த மாமனார் சந்திரன் மருமகன் ராமச்சந்திரனை அறிவாலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தாதாக நிலக்கோட்டை காவல்நிலையத்தில் சரணடைந்தார், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நிலக்கோட்டை காவல்துறையினர், ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராமச்சந்திரனை ஆணவக் கொலை செய்த மாமனார் சந்திரனை கைது செய்து சிறையிலடைத்தனர், இந்நிலையில் சந்திரன் ஒருவரால் மட்டும் ராமச்சந்திரன் வெட்டி கொலை செய்திருக்க முடியாது? இக்கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம்? என உண்மை கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறி, கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் மனைவி ஆர்த்தி மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இராமநாயக்கன்பட்டியில் உசிலம்பட்டி சாலையை மறித்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ராமச்சந்திரன் மனைவி ஆர்த்தி தொடர் போராட்டம் எதிரொலி காரணமாக, ராமச்சந்திரனை கொலை செய்த வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்திரன் என்பவருடன் அவரது மனைவி அன்புச்செல்வி (39) இவர்களது மகன் ரிவின் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து நேற்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் உத்தரவின் பேரில் சந்திரன் மற்றும் அவரது மகன் ரிவின் ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















