மேலும் அறிய

புது அடிமை கிடைக்குமா? ‘கை’ நம்மை விட்டுப் போகாது - திண்டுக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

கை நம்மை விட்டுப் போகாது. நான் என்னுடைய கையை கூறினேன். உங்கள் மேல் உள்ள நம்பிக்கையை கூறினேன் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி மகன் ஸ்ரீகாந்த் மணமகள் பிரியதர்ஷினி ஆகியோர் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பின் திருமண நிகழ்ச்சி மேடையில் பேசும்போது, இந்த திருமணத்தை  நடத்தி வைப்பதில் பெருமை அடைகிறேன்.  வீராசாமி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். 2 நாள் சுற்றுப்பயணம் நேற்று முழுக்க திருச்சி, மாலையில் இருந்து திண்டுக்கல்லில் இரவு வரை அரசு நிகழ்ச்சிகள் கட்சி நிகழ்ச்சிகளும், இன்று திருமண நிகழ்ச்சி மீண்டும் அரசு திட்டங்கள் இன்று மாலை திருச்சி மாவட்டம் செல்கிறேன். திருச்சியிலும் திண்டுக்கல்லிலும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். 

புது அடிமை கிடைக்குமா?  ‘கை’ நம்மை விட்டுப் போகாது - திண்டுக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

வீராச்சாமி முதலமைச்சர் ஸ்டாலினை வைத்து திருமணம் நடத்த வேண்டும் என ஆசைப்பட்டார். பல்வேறு தேர்தல் நிகழ்ச்சியில் இருப்பதால் அவரை அழைக்க முடியாது வேறு வழியில்லாமல் என்னை அழைத்தார்கள். உறுதியோடு, நிச்சயமாக சொல்கிறேன் முதலமைச்சர் ஸ்டாலின் அழைத்து இருந்தால் கண்டிப்பாக வந்து இருப்பார். முதலமைச்சர் ஸ்டாலின் வந்திருந்தாலும் நானும் அவருடன் வந்திருப்பேன். நேற்று மாலையிலிருந்து பல்வேறு நிகழ்ச்சிக்கு எங்கு சென்றாலும் எழுச்சி வரவேற்பு உள்ளது. இந்த திருமண விழா அரங்கிற்கு வாகனத்தில் இருந்து வரும்போது கூட எழுச்சி அன்பு பார்த்துவிட்டு தான் வந்தேன். 

முழுசாக மேடைக்கு வந்து செல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்னுடைய கைகளுடன் இந்த நிகழ்ச்சி மேடைக்கு நான் வருவேனா என்ற சந்தேகம் இருந்தது. கை நம்மை விட்டுப் போகாது. நான் என்னுடைய கையை கூறினேன். உங்கள் மேல் உள்ள நம்பிக்கையை கூறினேன். இங்கு உள்ள மகிழ்ச்சியும், எழுச்சியும் எனக்கு உற்சாகத்தை தருகிறது. திருமண நிகழ்விற்கு பத்திரிகை வைக்கும் பொழுது வேட்டி சேலை எனக்கு வழங்கினார்கள். பெருமையாக இருந்தது. ஆனால், சக்கரபாணி அண்ணன் கூறினார் தொகுதியில் உள்ள ஒன்றரை லட்சம் பேருக்கும் வழங்கியுள்ளோம் என்று. விழாவிற்கு மகளிர்கள், பாட்டிகள் வந்துள்ளனர்.

நம்முடைய அரசு மகளிருக்கான அரசாக இருந்து வருகிறது. நமது முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் என்பதுதான். 800 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு உள்ளனர். ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.900 முதல் 1000 வரை சேமிக்கின்றனர். உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 8 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தரமான உணவு அதன்பின்பே தரமான கல்வி அளித்து வருகிறோம்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2 ஆண்டுகள் நிறைவேற்றப்பட்டு ஆகியுள்ளது. சில மகளிர் வரவில்லை என குறைகள் கூறுகின்றனர். தற்போது அந்த திட்டம் விரிவுபடுத்த உத்தரவிடப்பட்டு 2 மாதங்களில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் உதவி தொகை திட்டம் வந்து சேரும். தமிழ்நாடு இந்தியாவில் எடுத்துக்காட்டு மாநிலமாகவும், எடுத்துக்காட்டு முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வருகிறார். இந்தியாவில் அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அடிமைகளுக்கும், பாசிஸிட்களும், சங்கிகளும் இந்த அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும். எப்படியாவது தமிழ்நாட்டை அபகரிக்க வேண்டும். கைப்பற்ற வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டுகின்றனர். ஒன்றிய பாசிச பாஜகவுக்கு ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி என்ற அடிமை சிக்கி உள்ளார். இன்று அந்த அடிமை பத்தவில்லை என்று புது அடிமை கிடைக்குமா என பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். 

புது அடிமை கிடைக்குமா?  ‘கை’ நம்மை விட்டுப் போகாது - திண்டுக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

புது அடிமை நிச்சயமாக கிடைப்பார்கள். ஆனால், எத்தனை அடிமைகள் ஒன்றாக சேர்ந்து வந்தாலும் கடைசி திமுக தொண்டர் இருக்கும்வரை பாசிச பாஜக தமிழ்நாட்டில் காலடி வைக்க முடியாது. கடைசி தொண்டன் கூட உங்களை ஓட ஓட விரட்டுவான். கல்வி உரிமை, மாநில உரிமை பறிக்கப்படுகிறது. 39 தொகுதி 32 தொகுதியாக குறைக்க திட்டம் நடக்கிறது. புதிய கல்வி கொள்கை கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை தமிழ்நாட்டில் எப்படியாவது திணிக்க வேண்டும் என பாஜக அரசு கொண்டு வருகிறது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு மட்டும் ஏற்றுக் கொள்ளாமல் உள்ளது. இதனால், தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதி 2500 கோடியை நம்முடைய வரி பணம் தர மாட்டேன் என கூறினார். 

புதிய கல்வி கொள்கை மூலமாக இந்தியை திணிக்க முயற்சிக்கிறீர்கள் ரூ.2500 கோடி கொடுத்தால் மட்டுமில்லை பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் புதிய கல்விக் கொள்கையை நுழைய விட மாட்டேன் என முதல்வர் கூறுகிறார். மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்கள் தமிழ்நாடு ஏற்றுக்கொள்கிறதா? என அனைத்து மாநிலங்களும் பார்த்து வருகிறது. பஞ்சாப் முதலமைச்சர் நமது காலை உணவு திட்டத்தை பார்த்துவிட்டு செல்கிறார். அவர் நமது கூட்டணி கட்சி கிடையாது.  ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர். 15 நாட்களுக்கு முன்பு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தமிழக புதுமை பெண் திட்டம் மிகச்சிறந்த திட்டம் எனக் கூறி செல்கிறார். இந்த திட்டங்களை தெலுங்கானாவில் அறிமுகப்படுத்தப் போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக முதலமைச்சர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். 2 கோடி பேர் நமது உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். சங்கிகளும் பாசிஸிட்டுகளும் தமிழ்நாட்டை கைப்பற்ற வேண்டும் என நினைத்து வருகின்றனர். அது தவிடு பொடி ஆக்கப்படும்.

புது அடிமை கிடைக்குமா?  ‘கை’ நம்மை விட்டுப் போகாது - திண்டுக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

எடப்பாடி பழனிசாமிக்கு எம்ஜிஆர் மறந்துவிட்டார், ஏற்கனவே ஜெயலலிதாவை மறந்தனர். நீலகிரி நிகழ்ச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அவருக்கு மாலை அணிவித்த பின் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததாக கூறுகிறார். கீழே இருக்கும் தொண்டன் கூறுகிறான் அது எம்ஜிஆர் சிலை என்று. எடப்பாடிக்கு அமித்ஷா மூஞ்சி மட்டுமே நினைவில் இருக்கிறது. இந்த திருமண மணமக்களுக்கு மட்டுமல்லாமல் முதல்வர் எங்கு சென்றாலும் கூறுவது என்னவென்றால் உங்களுக்குப் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி தமிழ் பெயர் வைக்க வேண்டும்” எனப் பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget