மேலும் அறிய
மதுரைக்கு ரெட் அலார்ட்.. தற்போது வானிலை நிலவரம் எப்படி இருக்கு?
கனமழையின்போது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மதுரை வானிலை நிலவரம்
Source : twitter
காலை மழைக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது. எனினும் மதியம் மேகமூட்டம் காணப்பட்டு மாலை அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மதுரைக்கு ரெட் அலர்ட் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (25.10.2026) ரெட் அலர்ட் (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. இநிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தாழ்வான பகுதிகள் மற்றும் மழைநீர் தேங்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா நேற்று இரவு மதுரை மாநகர் பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார்
அதன் தொடர்ச்சியாக, கர்டர் பாலம் சுரங்கப்பாதையில் உள்ள மழைநீர் வெளியேற்றும் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். மேலும், மழைநீரை விரைந்து வெளியேற்றுவதற்கான மோட்டார் பம்புகள் மற்றும் பிற உபகரணங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, கனமழையின்போது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வானிலை நிலவரம் எப்படி இருக்கிறது
இந்நிலையில் இன்று வானம் குளிர்ந்த மேகமூட்டத்துடன் காட்சி அளிக்கிறது. ஆனால் தற்போது பெருமழைக்கு வாய்ப்பு குறைவாகவே தென்படுகிறது. காலை மழைக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது. எனினும் மதியம் மேகமூட்டம் காணப்பட்டு மாலை அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என அறிவுருத்தல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















