மதுரையில் காலை முதல் கொளுத்திய வெயில் மாலையில் வெளுத்து வாங்கிய கனமழை - சாலைகளில் தேங்கிய மழைநீர் - போக்குவரத்து ஸ்தம்பித்தது*
 
காலை முதலாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
 
மதுரை மாவட்டம் முழுவதும் காலை முதலாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கொளுத்திய வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளான நிலையில் மாலையில் திடிரென மதுரை மாநகர பகுதிகளில் கனமழை பெய்தது. கே.கே.நகர், கோரிப்பாளையம், அண்ணாநகர்,  அண்ணா பேருந்துநிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செல்லூர், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, சிம்மக்கல், தெற்குவாசல் ஆனையூர், கீழவாசல், கடச்சனேந்தல், ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.இதன் காரணமாக சிம்மக்கல், ஆரப்பாளையம், தெற்குவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில்  மழைநீர் குளம்போல தேங்கியதால் அரசு வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியபடி சென்றது. மதுரையில் பல மாதங்களுக்கு பிறகு கனமழை பெய்தததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
 
மீனாட்சியம்மன் கோயில் அருகே கனமழையால் மழைநீரில் மூழ்கிய சாலைகள்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே வடக்குமாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் பெய்த கனமழை காரணமாக சாலை முழுவதும் மழைநீரில் மூழ்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது. 20 நிமிடம் பெய்த கனமழையால் சாலைகள் மூழ்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்