மேலும் அறிய
Madurai Train Derailed: மதுரையில் தடம்புரண்ட பயணிகள் ரயில்.. பெரும் பரபரப்பு..உயிர் தப்பிய மக்கள்..!

Madurai Train Derailed: மதுரையில் தடம்புரண்ட பயணிகள் ரயில்.. பெரும் பரபரப்பு..உயிர் தப்பிய மக்கள்..!
கோவையில் இருந்து மதுரை வந்த பயணிகள் ரயில் தடம்புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகளை இறக்கிவிட்ட பின்பு பணிமனைக்கு சென்றபோது கடைசி பெட்டி தடம்புரண்டது. அதிர்ஷ்டவசமாக ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் மதுரை ரயில் நிலையத்தில் தடம்புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மேலும் அவர்கள் தடம்புரண்ட ரயிலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விபத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்




















