மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ஆதார் கட்டாயம், கட்டண உயர்வு, புதிய மாற்றங்கள் - தெரிந்து கொள்ளுங்கள்

1 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வகையில் சர்வர் மேம்படுத்தப்பட்டு இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் போக்குவரத்து சேவையில் ரயில் போக்குவரத்து  நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்யவும் முடியும் என்பதால் ரயில் பயணத்தை ஏராளமான மக்கள் விரும்பி வருகின்றனர். தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர்.  ரயில்வேயும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 1) முதல் ரயில்வேயில் மூன்று முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ரயில்களில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது. ஆனால் அவசர காலத்தில் ரயில்வேயின் தட்கல் திட்டம் கைகொடுக்கிறது. தட்கல் திட்டம் பயணிகள் தங்கள் பயணத்திற்கு ஒரு நாள் முன்பு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. இது உடனடி அல்லது அவசர பயணத் தேவைகளுக்கு ஏற்றதாக அமைகிறது. ஆனாலும் அதிக தேவை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் இருப்பதால் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை எடுப்பது பெரும் சவாலாக உள்ளது. சாமானிய மக்களுக்கு தட்கல் டிக்கெட் எளிதில் கிடைக்காத நிலையில், தட்கல் டிக்கெட் எடுப்பது எப்படி? என மக்கள் தொடர்ந்து பெரும்பாலும் சிக்கலை சந்திப்பதுடன் குற்றம்சாட்டி வந்தனர்.

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ஆதார் கட்டாயம், கட்டண உயர்வு, புதிய மாற்றங்கள் - தெரிந்து கொள்ளுங்கள்

இதனால் இன்று முதல் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஐஆர்சிடிசி கணக்கு வைத்திருப்பவர்கள் அவற்றை ஆதாருடன் இணைத்தால் மட்டுமே தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியும். இதன்மூலம் இனிமேல் போலி ஏஜெண்ட்கள் களையெடுக்கப்படுவார்கள். ரயில்வேயின் இந்த முடிவுக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதேபோல் இன்று முதல் ரயில் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஏசி வகுப்புகளுக்கான கட்டணம் கி.மீ.க்கு 2 பைசாவும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கான கட்டணம் கி.மீ.க்கு 1 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத வகுப்புகளுக்கான கட்டணத்தை கிலோமீட்டருக்கு 1 பைசாவும், அனைத்து ஏசி வகுப்புகளுக்கான கட்டணத்தையும் கிலோமீட்டருக்கு 2 பைசாவும் அதிகரித்து ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ஆதார் கட்டாயம், கட்டண உயர்வு, புதிய மாற்றங்கள் - தெரிந்து கொள்ளுங்கள்

 புறநகர் ரயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதேபோல் 500 கி.மீ வரையில் சாதாரண இரண்டாம் வகுப்பு கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை.ரயில்களில் நாம் டிக்கெட் முன்பதிவு செய்தால் அந்த ரயில் புறப்படும் 4 மணி நேரத்துக்கு முன்பே சார்ட் எனப்படும் இறுதிக்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது. ஒருவேளை வெயிட்டிங் லிஸ்ட் இருந்து டிக்கெட் கன்பார்ம் ஆகாமல் இருந்தால் டிக்கெட் கிடைக்காத பயணிகள் அவசரம், அவசரமாக தங்கள் பயணங்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.

பயணிகளின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் இனிமேல் ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பு சார்ட் வெளியிடப்படும்.இதனால் டிக்கெட் கன்பார்ம் ஆகாத பயணிகள் தங்களின் அடுத்தகட்ட பிளான் குறித்து அவசரமின்றி முடிவெடுக்க முடியும். மேலும் இதுவரை ஒரு மணி நேரத்துக்கு 35,000 டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு வந்த நிலையில், இனிமேல் 1 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வகையில் சர்வர் மேம்படுத்தப்பட்டு இருப்பதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!
நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
Embed widget