மேலும் அறிய

சிறுபான்மையின மக்கள் பயன் பெற லோன் மேளாக்கள் - விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் (TAMCO) சார்பில் 20.06.2024 அன்று மாபெரும் லோன்மேளா நடைபெற உள்ளது - தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தமிழ்நாடு   சிறுபான்மையினர்   பொருளாதார   மேம்பாட்டு   கழகம்  மூலம் தனிநபர்  கடன்,  சுய  உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைகலைஞர்களுக்கு கடன்,  கல்வி  கடன்   திட்டம்  ஆகிய கடன்   திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தனிநபர் கடன் திட்டத்தில், 6% வட்டி விகிதத்தில் ரூ.20,00,000/-வரை கடன் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறத்திற்கு ரூ.1,20,000/- கிராமப்புறத்திற்கு ரூ.98,000/- மிகாமல் இருக்க வேண்டும். ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.30,00,000/- வரை கடன் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு  மிகாமல் இருத்தல் வேண்டும்.

சிறுபான்மையின மக்கள் பயன் பெற லோன் மேளாக்கள் -  விண்ணப்பிப்பது எப்படி?

கைவினை கலைஞர்கள் கடன் திட்டத்தில் ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- வரை கடன் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறத்திற்கு ரூ.1,20,000/- கிராமப்புறத்திற்கு ரூ.98,000/- மிகாமல் இருக்க வேண்டும். ஆண்களுக்கு 6%, பெண்களுக்கு 5% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.10,00,000/- வரை கடன் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சுய  உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டத்தில்,  7% வட்டி விகிதத்தில் ரு.1,00,000/- வரை கடன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறத்திற்கு ரூ.1,20,000/- கிராமப்புறத்திற்கு ரூ.98,000/- மிகாமல் இருக்க வேண்டும். ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.1,50,000/- வரை கடன் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு  மிகாமல் இருத்தல் வேண்டும்.

மேலும், சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை/முதுகலைதொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் பயில்பவர்களுக்கு 3% வட்டி விகிதத்தில் ரூ.20,00,000/-(ஆண்டிற்கு 4 இலட்சம்) வரை, வெளிநாடுகளில் தொழிற்கல்வி / வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகள் பயில்பவர்களுக்கு ரூ.30,00,000/-(ஆண்டிற்கு 6 இலட்சம்) வரை, கடனுதவி பெற  ஆண்டு வருமானம் நகர்ப்புறத்திற்கு ரூ.1,20,000/- கிராமப்புறத்திற்கு ரூ.98,000/- மிகாமல் இருக்க வேண்டும். மற்றும் மாணவர்களுக்கு 8%, மாணவிகளுக்கு 5%, வட்டி விகிதத்தில் ரூ.20,00,000/-(ஆண்டிற்கு 4 இலட்சம்) வரை, வெளிநாடுகளில் பயில்பவர்களுக்கு ரூ.30,00,000/-(ஆண்டிற்கு 6 இலட்சம்) வரை, கடனுதவி பெற  ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு  மிகாமல் இருத்தல் வேண்டும்.

சிறுபான்மையின மக்கள் பயன் பெற லோன் மேளாக்கள் -  விண்ணப்பிப்பது எப்படி?

மேற்படி, கடன் திட்டங்களில்  தேனி மாவட்டத்தில்  வசிக்கும்  கிறித்துவ,  இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் பயன் பெறுவதற்கு,  லோன் மேளாக்கள் கீழ்த்தெரிவிக்கப்பட்டுள்ள கூட்டுறவு நிறுவனங்களில்   20.06.2024  அன்று காலை 10.00 மணி முதல்  மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
1. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அல்லிநகரம் கிளை, தேனி.
2. ஏ145, பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கி, பெரியகுளம்.
3. டிடி109, ஆண்டிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஆண்டிபட்டி.
4. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, போடிநாயக்கனூர் கிளை, தேனி.
5.எம்.டி.தனி 97 இராயப்பன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், உத்தமபாளையம்.
6.எம்பி 101 சின்னமனூர் வெற்றிலை பயிரிடுவோர் கூட்டுறவு சங்கம், சின்னமனூர்.
 7.ஏ425 காமயகவுண்டன் பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், கம்பம்.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, தொழில் குறித்த விவரம்/திட்ட அறிக்கை, கடன் தொகை ரூ.25,000/- கோரும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில்  உறுப்பினராக உள்ள ஒரு நபர் ஜாமீன் கையெழுத்திட வேண்டும்.

சிறுபான்மையின மக்கள் பயன் பெற லோன் மேளாக்கள் -  விண்ணப்பிப்பது எப்படி?
கடன் தொகை ரூ.50,000/- கோரும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில்  உறுப்பினராக உள்ள இரு நபர் ஜாமீன் கையெழுத்திட வேண்டும். கடன் தொகை ரூ.1,00,000/- மேல் கோரும் பட்சத்தில், கோரப்படும் தொகைக்கு  இரு மடங்கு சொத்து அடமான ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafied Certficate) கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது/செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வங்கி கோரும் ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Embed widget